எத்தனை முறை தான் இதை செய்விங்க தல. மீண்டும் இன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி – வைரல் வீடியோ

dhoni-keeping

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று துவங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Team

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். முன்ரோ 72 ரன்களும் மற்றும் செபர்ட் 43 ரன்களும் குவித்தனர். தற்போது வரை இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 182 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முதல் விக்கெட் 80 ரன்களில் தோனியின் அதிவேக ஸ்டம்பிங் மூலம் விழுந்தது. செபர்ட் 43 ரன்கள் எடுத்திருந்த போது குலதீப் யாதவ் பந்துவீச்சில் தோனி ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தார். இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :

இந்திய அணியின் வீரர்கள் இன்று பீல்டிங் ரொம்ப மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை மூன்று கேட்சைகளை தவறவிட்டுள்ளனர். நியூசிலாந்து 220 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே :

எனக்கு அடுத்து நீ தான் இந்திய அணிக்கு கீப்பர் . போட்டி துவங்கும் முன் ரிஷப் பண்டிற்கு கீப்பிங் ஆலோசனை வழங்கி கொண்டிருந்த தல தோனி ஆலோசனை வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்