எனக்கு அடுத்து நீ தான் இந்திய அணிக்கு கீப்பர் . போட்டி துவங்கும் முன் ரிஷப் பண்டிற்கு கீப்பிங் ஆலோசனை வழங்கி கொண்டிருந்த தல தோனி – வைரல் வீடியோ

Dhoni-Pant

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று துவங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Team

தற்போது நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான செபர்ட் 25 பந்துகளை எதிர்கொண்டு 43 ரன்களை அதிரடியாக குவித்தார். இதில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி அடங்கும்.

இந்நிலையில் இந்த போட்டி துவங்கும் முன் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் நம்ம தல தோனி இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு விக்கெட் கீப்பிங் ஆலோசனைகளை வழங்கினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராகும் வாய்ப்பு பண்டிற்கு அதிகம் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார் தோனி .

இதையும் படிக்கலாமே :

டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்த ரோஹித். அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்த ரோஹித்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்