எம்.எஸ். தோனி : மீண்டும் அசால்ட் ஸ்டம்பிங் செய்த தோனி – வைரல் வீடியோ

Ms

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன்படி ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர்கள் ஆட்டத்தை துவங்கினர்.

Toss

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் டார்கெட்டை நிர்ணையித்தது ஆஸ்திரேலிய அணி. அந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி களமிறங்க தயாராகி வருகிறது.

நேற்றைய வலைப்பயிற்சியில் காயமடைந்த இந்திய அணி வீரரான தோனி இன்றைய போட்டியில் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் எடுத்திருந்தபோது பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் 19 ரன்களில் ஆடிவந்தார். அப்போது 30ஆவது ஓவரை வீசிய குல்தீப் பந்தை வீச பந்து சுழன்று சென்றது அப்போது பந்தை தவறவிட்ட ஹாண்ட்ஸ்கோம்ப்பை தோனி அசால்டாக ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோ தற்போது அதிக அளவில் பகிரப்படும் வருகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எம்.எஸ். தோனி : கடைசி ஓவரில் கேப்டனாக மாறிய தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : MS Dhoni doing magical behind the stumping