ரோஹித் நீ இரு நான் பாத்துக்குறேன். பீல்டிங் பிளானை மாற்றியமைத்து கேப்டனாக தல தோனி – வைரல் வீடியோ

msd

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

gugalin

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

இந்த போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணிக்கு நடுவரிசையில் பந்துவீச பந்துவீச்சாளர் களையும், பீல்டர்களையும் தோனி செட் செய்தார். அணிக்கு ரோஹித் கேப்டனாக இருந்தும் முடிவுகளை தோனி எடுத்து தோனி ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. இதோ அந்த வைரல் வீடியோ :

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது தல தோனியை கேப்டனாக இந்த வீடியோவில் பார்த்ததால் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அவரது ரசிகர்களால் தீயாக பரவி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

சவுதி ஓவரில் ஒற்றை கையால் மிக உயரமாக சிக்ஸ் அடித்த பண்ட் . அசந்து போன தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்