ஆஸ்திரேலிய தொடருக்காக கெத்தாக ஹேர் ஸ்டைல் செய்து, புதிய கெட்டப்புக்கு மாறிய தல தோனி – வைரல் புகைப்படம் உள்ளே

dhoni 1

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

ms

இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் கொண்ட இரண்டிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இடம்பிடித்துள்ளார். தனது இளம் வயதிலிருந்தே தோனிக்கு ஹேர் ஸ்டைல் மீது கொண்ட பிரியம் நாம் அனைவரும் அறிந்ததே. லாங் ஹேர், ஷார்ட் ஹேர், மொஹாக் என நிறைய ஹேர் ஸ்டைல்கள் செய்துள்ளார் தல தோனி.

தற்போது நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடருக்காக அவர் ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். தோனிக்கு கடந்த 10 வருங்களாக ஹேர் ஸ்டைல் செய்யும் சிகை வடிவமைப்பாளர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தோனியின் ஆஸ்திரேலிய தொடருக்கான சமீபத்திய ஹேர் கேட் போட்டோவை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்பட பதிவு :

MS

இந்த புகைப்படத்தில் வெள்ளை தாடி முழுவதையும் எடுத்துவிட்டு 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போன்று இளமையான தோற்றத்தில் தோனி உள்ளார். இந்த பதிவு இப்போது இணையத்தில் தோனி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. உங்களது கருத்துகளையும் கமெண்டில் பதிவிடலாம் நண்பர்களே.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விட இரண்டு மடங்கு பலமாக இந்த அணி திகழும். அதன் காரணம் இதுதான். அவர்களை இந்திய அணி சமாளிக்க சிறப்பான ஆட்டம் அவசியம் – சுனில் கவாஸ்கர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்