உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விட இரண்டு மடங்கு பலமாக இந்த அணி திகழும். அதன் காரணம் இதுதான். அவர்களை இந்திய அணி சமாளிக்க சிறப்பான ஆட்டம் அவசியம் – சுனில் கவாஸ்கர்

gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

worldcup

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை விட பலமான அணி ஒன்று இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் கவாஸ்கர் கூறியதாவது : இந்திய அணி நிச்சயம் வலுவான அணிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை அதுபோன்று இந்திய அணி கோப்பையை வேலும் வாய்ப்பும் உண்டு. இருப்பினும், இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடரை இந்திய அணியை விட இரண்டு மடங்கு பலத்துடன் விளையாடும். ஏனெனில், அவர்களுக்கு அந்த தொடர் சொந்த மண்ணில் நடைபெறுகிறது.

Joe Root

சொந்த மண்ணில் நாடாகும் தொடர் என்பதால் அவர்களுக்கான சாதகம் அதிகம் இருக்கும். மேலும், கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து சரியான முறையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று வருகிறது. அந்த அணியின் ஆல்ரவுண்டர்கள் இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பந்த்துவீச்சு மற்றும் மைதானங்கள் என அனைத்துமே இங்கிலாந்து சாதகமாக இருப்பதால் கோப்பையை வெல்ல இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று கவாஸ்கர் கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

எங்களின் இந்த வங்கதேச ஒருநாள் தொடரின் வெற்றிக்கு காரணம். இந்திய அணியிடம் இருந்து கற்றுக்கொண்ட இதுதான் – நியூசி கேப்டன் வில்லியம்சன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -