தல தோனியின் சிறப்பை பாராட்டும் விதமாக அவரின் பெயரில் எம்.எஸ்.தோனி பெவிலியன் அமைத்த கிரிக்கெட் மைதானம் – அதுவும் இந்த மைதானத்தில் அந்த கவுரவமா ? ரசிகர்கள் கொண்டாட்டம்

Dhoni

இந்திய அணியின் முன்னணி வீரர், தலைசிறந்த கேப்டன் என பல பெருமைகளை தன்வசம் வைத்துள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவரது அதிரடி ஆட்டம் மற்றும் கூல் கேப்டன்சி மூலம் உலகின் அனைத்து நாடுகளிலும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

dhoni 2

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் தோனி. ஐ.சி.சி. நடத்திய அனைத்து உலகக்கோப்பைகளையும் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் லெஜண்ட் வரிசையில் தோனியும் ஒரு சகாப்தமாக இணைந்துள்ளார்.

இவரின் பெருமையினை போற்றும் விதமாக இந்தியாவில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரின் கிரிக்கெட் மைதானத்தில் தோனிக்காக தனியாக ஒரு பெவிலியனை அமைத்துள்ளனர் அந்த மாநில கிரிக்கெட் நிர்வாகிகள். எம்.எஸ். தோனி என பெயரிடப்பட்டுள்ள அந்த பெவிலியனின் புகைப்படம் இதோ :

dhoni pavilion

ராஞ்சி தோனி பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களின் பெயரில் ஏற்கனவே பெவிலியன் உள்ளது குறிப்பிடத்தக்கது. சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் கவாஸ்கர் என முன்னணி வீரர்களின் வரிசையில் தற்போது தோனிக்கும் இந்த கவுரவத்தினை அளித்துள்ளனர் இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகிகள்.

இதையும் படிக்கலாமே :

குருனால் பாண்டியாவை சிங்கில் ஓட தடுத்ததன் காரணம் இதுதான். அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது – தினேஷ் கார்த்திக் வேதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்