குருனால் பாண்டியாவை சிங்கில் ஓட தடுத்ததன் காரணம் இதுதான். அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது – தினேஷ் கார்த்திக் வேதனை

Dinesh-Karthick

சென்ற வாரம் நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியது. ஆனால், டி20 தொடரை அதிர்ஷ்ட வசமின்றி (2-1) என்ற கணக்கில் இழந்து ஏமாற்றம் அடைந்தது .

Team

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஹாமில்டன் நகரில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் ஒரு சிங்கில் எடுக்காமல் விட்டதே இதற்கு காரணம் எண்டு பலரும் கருத்து கூறிவந்தனர்.

தற்போது அந்த ஒரு ரன்னை எடுக்காமல் விட்டதற்கான காரணத்தை வெளியிட்டார் தினேஷ் கார்த்திக். அதில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : கடைசி ஓவரில் நான் அந்த ஒரு ரன்னை ஓடாதது தப்புதான். அனால், அந்த ஓவரில் என்னால் வெற்றிக்கு தேவையான ரன்னை அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மேலும், அடுத்த பந்தை சிக்ஸர் அடிக்கமுடியும் என்று நான் நினைத்தேன்.

Dinesh

அதனால் தான் அந்த ஒரு ரன்னை நான் ஓடவில்லை. என்னால் கண்டிப்பாக சிக்ஸ் அடிக்க முடியும் என்று நினைத்தே அந்த ரன்னை நான் ஓடவில்லை. அதைப்போன்று கடைசி பந்தில் நான் சிக்ஸ் அடித்தேன் இருந்தும் 4 ரன் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது வருத்தம் அளிக்கிறது என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ரூட்டை ஓரின சேர்க்கையாளர் என்று கூறிய கேபிரியலுக்கு கடுமையான தண்டனை விதித்த ஐ.சி.சி – ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்