தோனியை கிரிக்கெட் மைதானத்தில் துரத்திச்சென்று கட்டிப்பிடித்த ரசிகர் – வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இரண்டாவதாக பீல்டிங் செய்ய இந்திய அணி வந்தபோது தோனியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடி வந்து தோனியை கட்டி பிடித்தார். தோனியும் அவருடன் விளையாடியவாறு ஓடி சென்று இறுதியில் அந்த ரசிகரை கட்டி அணைத்தார். இதோ அந்த வீடியோ :

முதலில் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் தோனி அதிர்ஷ்டவசமின்றி கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் கோலி மட்டும் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

பிறகு ஆஸ்திரேலிய அணி 251 என்ற இலக்கினை எதிர்த்து தற்போது விளையாடி வருகிறது. 24 ஓவர்களில் 123 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது. இன்னும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 128 ரன்களை அடிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே :

விஜய் ஷங்கர் கிரிக்கெட் வாழ்வில் விளையாடும் விதி. பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்