விஜய் ஷங்கர் கிரிக்கெட் வாழ்வில் விளையாடும் விதி. பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் – வீடியோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் இன்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. துவக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் களமிறங்கினர்.

Toss

இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியை தந்தார். பிறகு கேப்டன் கோலி தவானுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடும் என்று எதிர்பாத்த நிலையில் தவான் 21 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த ராயுடு 18 ரன்களில் வெளியேற விஜயும் கோலியும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக ஆடிய விஜய் ஷங்கர் 46 ரங்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். கோலி அடித்த பந்து நேராக சென்று ஜாம்பாவின் கையில் பட்டு ஸ்டம்பை அடித்தது. இதோ அந்த வீடியோ :

இந்த போட்டியில் கோலி சதம் அடித்தார். சிறப்பாக ஆடிவந்த விஜய் இன்று ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ஷ்டவசமின்றி வெளியேறினார். தற்போது ஆஸ்ரேலிய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை அடித்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

முதல் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறிய ஹிட்மேன் ரோஹித் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்