சாஹலின் பேட்டிக்கு பயந்து மைதானத்தில் தலை தெறிக்க சிரித்துக்கொண்டே ஓடிய தல தோனி – வைரல் வீடியோ

dhoni

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதன் வெற்றியை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது இந்திய அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தை சுற்றியபடி இருந்தனர்.

hitman

இந்திய அணி சுழற்பந்து வீச்சாளரான சாஹல் யுடியூப் சேனல் ஒன்றினை வைத்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு வெற்றிகரமான போட்டி முந்தித்ததும் இந்திய அணியின் வீரர்களை தனது சேனல் மூலம் பேட்டி எடுக்கும் பழக்கம் உடையவர் சாஹல். அந்த பெட்டியில் ஜாலியாக இந்திய அணி வீரர்கள் பேசுவது வழக்கம். மேலும், வீரர்களின் பழக்கங்கள் குறித்தும் அதில் பேசுவர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வெற்றி கொண்டாடிக்கொண்டிருந்த வேலையில் இந்திய அணியின் தல தோனியை பேட்டி எடுக்க சென்றார் சாஹல். இதனை கவனித்த தோனி ஐயோ உன் சேனலுக்கு நான் பேட்டி கொடுக்க மாட்டேன் என்பது போல் சிரித்துக்கொண்டே ஓடினார். சாஹல் அவரை பின்தொடர்ந்தார், இருப்பினும் வேகமாக ஓடி அறைக்கு சென்றார் தோனி

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சாஹல் நடத்தி வரும் யுடியூப் சேனலிலும் தோனி ஓடுவதை படம் பிடித்து இணைத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரின் மைதானங்கள் மாற்றம் – காரணம் மோடியா ?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்