ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரின் மைதானங்கள் மாற்றம் – காரணம் மோடியா ?

modi

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்கிற கணக்கில் அபாரமாக வீழ்த்தி சாதனையுடன் கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய வீரர்கள் பாராட்டு மழையில் நனைந்த வண்ணம் உள்ளனர்.

indian-team

இப்போது இந்திய அணியின் அடுத்த தொடராக ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இந்தியா வர உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற இருந்தது. ஆனால், இந்த போட்டி தற்போது பெங்களூருவிலிருந்து விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

ms

அதன்படி பிரதமர் 24ஆம் தேதி பெங்களூரு விமானப்படை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி போட்டி பெங்களூருவிலிருந்து விசாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது போட்டி விசாகப்பட்டினம் இருந்து பெங்களூரு மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே :

உன் அம்மா இறந்து விட்டார்கள் வீட்டிற்கு விரைவாக திரும்பு -மே.இ வாரியம் – நான் போட்டியை முடித்துவிட்டு செல்கிறேன் – நெகிழ்ச்சியான தருணம்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்