மீண்டும் கேப்டனாக களமிறங்க போகும் தல தோனி. பி.சி.சி.ஐ அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆதாரம் இதோ

Dhoni

இந்திய அணி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய ணி அடுத்து நியூசிலாந்து சென்று அங்கும் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்தது.

msd

இந்நிலையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியா வந்து 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓய்வின்றி போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவர்களுக்கு விருப்ப ஓய்வினை அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.

அதன்படி அவர்கள் இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டால் தோனிக்கு கடைசி முறையாக கேப்டன் பதவி கிடைக்கும். மீண்டும் தங்களது தல டாஸ் நாணயத்தை சுடுவதை காண அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த செய்தி தோனி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ பி.சி.சி.ஐ அறிவித்த அறிவிப்பு :

MS

இன்னும் அவர்கள் இருவரும் ஓய்வு பற்றி ஏதும் கேட்காததால் இப்போதைக்கு எதுவும் முடிவாகவில்லை. கோலி தனது ஓய்வை தொடர விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், ரோஹித் ஓய்வு வேண்டும் என்று கேட்டால் தோனி இம்மாத இறுதியில் இந்திய அணிக்கு கேப்டனாவது உறுதி என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிக்கலாமே :

தல தோனியின் சிறப்பை பாராட்டும் விதமாக அவரின் பெயரில் எம்.எஸ்.தோனி பெவிலியன் அமைத்த கிரிக்கெட் மைதானம் – அதுவும் இந்த மைதானத்தில் அந்த கவுரவமா ? ரசிகர்கள் கொண்டாட்டம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்