உலகக்கோப்பை தொடரில் இவரே துவக்க ஓவர்களை வீசவேண்டும் – தோனி விருப்பம்

ms

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் போன்றவைகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அதன் பிறகு தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ind vs nz trophy

நேப்பியரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னராக உலகக்கோப்பை தொடர் குறித்த தனது கருத்தினை தோனி தற்போது தெரிவித்துள்ளார்.

அதில் தோனி கூறியதாவது : தொடர்ந்து நம்முடைய அணி சிறப்பாக ஆடிவருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம்முடைய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என்று அனைத்தும் சிறப்பாக உள்ளது. தற்போதைய இந்திய அணி சரியான கலவையில் உள்ளது. எனவே, இந்த அணியை அப்படியே உலகக்கோப்பை தொடருக்கு கொண்டு செல்லலாம்.

mohammed-shami

மேலும், வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி துவக்க ஓவர்களை வீசவேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில், காயத்திற்கு பிறகு மீண்ட இவரது வேகம் மற்றும் பந்து வீசும் இடம் போன்றவை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரின் பந்துவீச்சு தற்போது டாப் கிளாசில் உள்ளது. எனவே, முகமது ஷமி துவக்க ஓவர்களை வீச வைக்கலாம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

அல்பி மோர்கலை தொடர்ந்து தெ.ஆ அணியின் அடுத்த ஆல்ரவுண்டர் ஓய்வு – வீரர்கள் பிரியாவிடை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்