அல்பி மோர்கலை தொடர்ந்து தெ.ஆ அணியின் அடுத்த ஆல்ரவுண்டர் ஓய்வு – வீரர்கள் பிரியாவிடை

botha-2

கடந்த சில ஆண்டுகளில் தென்னாபிரிக்க அணியின் முக்கிய வீரர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர். சில நாட்களுக்கு முன்பு தான் தென்னாபிரிக்க அணியின் முக்கிய வீரரான அல்பி மோர்கல் தனது ஓய்வு முடிவினை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

botha 1

இந்நிலையில், தென்னாபிரிக்கா அணியின் அடுத்த ஆல்ரவுண்டர் தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். அவர் அந்த அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஜோகன் போத்தா ஆவர். இவர் அந்த அணிக்கு சில ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவந்த இவர் தற்போது நாடக்கும் பிக்பேஷ் போட்டி முடிந்த பிறகு முழுமையான ஓய்வினை எடுக்க உள்ளார்.

36 வயதான ஜோகன் போத்தா தென்னாபிரிக்க அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 78 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அணியில் சேர்க்க படாமல் இருந்ததால் அவர் இந்த ஓய்வு அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

botha

போத்தா ஸ்மித் தலைமையிலான அணியில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளார். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடக்கத்து.

இதையும் படிக்கலாமே :

தவானின் இந்த அதிர்ஷ்டம் தான் அவரை தொடர்ந்து காப்பாற்றி சிறப்பாக ஆட வைக்கிறது – சுனில் கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்