ஏறி வந்து சிக்ஸ் அடிக்க நினைத்த தல தோனி. கடைசில அவரை வித்த காட்ட வச்சிட்டாங்க. அசாத்திய திறமையால் பந்தை நிறுத்திய தல – வீடியோ

msd
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Krunal

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஸ்பின் பவுலரான சாந்த்னர் பந்துவீசிய போது அதனை சிக்ஸ் அடிக்க முயன்று இறங்கி வந்தார் தோனி. ஆனால், அந்த பந்தை பவுலர் தள்ளி வீச தோணி ஒரு கையால் அதனை சமாளித்து தடுத்து நிறுத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தோனி ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனி ரசிகர்கள் தோனியை கொண்டாடும் விதம் வேறு எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த அளவு ரசிகர்கள் இல்லை என்பதை தோனி ரசிகர்கள் பெருமையுடன் சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே :

ஆட்டநாயகன் பெற தகுதியுள்ள வீரர். இந்த ஒரு ஓவர் தான் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது – ரோஹித்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -