ஆட்டநாயகன் பெற தகுதியுள்ள வீரர். இந்த ஒரு ஓவர் தான் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது – ரோஹித்

rohith-sad
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 158 ரன்களை அடித்தது. நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Team

அடுத்து ஆடிய இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வென்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 50 ரன்களும், பண்ட் 40 ரன்களும் அடித்தனர். குருனால் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 28 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்டியா தட்டி சென்றார்.

- Advertisement -

இதுகுறித்து கேப்டன் ரோஹித் கூறுகையில் : பவர் பிளேயின் கடைசி ஓவரை வீச குருனால் பாண்டியாவை அழைத்தேன். அவரும் தைரியமாக வந்து பந்து வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் துவக்க வீரர் முன்ரோ, கடைசி பந்தில் மிட்சல் என இரண்டு முக்கிய வீரர்களை வீழ்த்தினார். இந்த ஓவர் தான் ஆட்டத்தை இந்திய அணியின் வெற்றி பாதைக்கு திருப்பியது.

Krunal

அதன் பின் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விக்கெட்டையும் அவரே வீழ்த்தினார். மொத்தத்தில் ஆட்டநாயகன் விருது பெறவேண்டிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என்றும் ரோஹித் பேட்டி அளித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

ரோஹித் நீ இரு நான் பாத்துக்குறேன். பீல்டிங் பிளானை மாற்றியமைத்து கேப்டனாக தல தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -