MS Dhoni : முழுக்காலையும் நீட்டி தனது விக்கெட்டை பாதுகாத்த தோனி – வைரல் வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதனபடி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களையும், ராகுல் 47 மற்றும் தோனி 40 ரன்களையும் குவித்தனர்.

Toss

பிறகு ஆடிய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் அபார சதம் மூலம் போட்டியினை 19.4 ஓவர்களில் 194 ரன்கள் குவித்து எளிதாக வென்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 குவித்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் என இரண்டு விருதினையும் தட்டிச்சென்றார். ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் தோனி சந்தித்த 3 பந்தை சிக்ஸ் அடிக்கும் நோக்கில் ஏறிவந்தார். ஆனால், பவுலர் ஆடம் ஜாம்பா பந்தை உள்ளே வீச பந்து கீப்பர் வசம் சென்றது. இதனால் தனது விக்கெட்டினை பாதுகாத்துக்கொள்ள பின்புறமாக முழுநீளத்தில் காலை விரித்து கிரீசை தொட்டார். இந்த வயதிலும் இவரது பிட்னஸ் இதற்கு காரணம் இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனியின் இந்த செயல் அவர் இன்னும் எப்படி இந்த அளவிற்கு பிட்டாக இருக்கிறார் என்று யோசிக்க வைக்கிறது. தோனியின் இந்த வீடியோ அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

- Advertisement -

KL Rahul : அடுத்தது சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய ராகுல் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : dhoni brilliant effort in the middle ground

- Advertisement -