தல தோனியின் சிறப்பு பற்றி தெரியவேண்டுமா ? ஸ்டம்பிங், ரிவியூ,கேட்ச் மற்றும் ரன்அவுட் என புத்திசாலித்தனமான 100 விக்கெட்டுகள் – வைரல் வீடியோ

msd

இந்திய அணியின் முன்னணி வீரர், தலைசிறந்த கேப்டன் என பல பெருமைகளை தன்வசம் வைத்துள்ளவர் மகேந்திர சிங் தோனி. இவரது அதிரடி ஆட்டம் மற்றும் கூல் கேப்டன்சி மூலம் உலகின் அனைத்து நாடுகளிலும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

dhoni-keeping

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வரும் தோனி. ஐ.சி.சி. நடத்திய அனைத்து உலகக்கோப்பைகளையும் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் லெஜண்ட் வரிசையில் தோனியும் ஒரு சகாப்தமாக இணைந்துள்ளார்.

இந்நிலையில் இவரது விக்கெட் கீப்பிங் திறமை பற்றி மேலும் அவரது அசாத்தியமான திறமை மற்றும் புத்திசாலி தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோ முடிவில் நீங்கள் நிச்சயம் அவரது ரசிகராக மாறிவிடுவீர்கள். இதோ இந்த வீடியோ இணைப்பு :

தோனியின் திறமை அசாத்தியமானது. இவரை போன்ற இன்னொரு வீரர் இந்திய அணிக்கு கிடைப்பது அரிது. எத்தனை வீரர்கள் வந்தாலும் போனாலும் தோனி தோனி தான். அவர் இந்திய அணியின் ஒரு சகாப்தம்.

இதையும் படிக்கலாமே :

தல அஜித்தின் மங்காத்தா மியூசிக்குடன் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய டிவில்லியர்ஸுக்கு பால் அபிஷேகம் செய்த – தல அஜித் ரசிகர்கள் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்