தல அஜித்தின் மங்காத்தா மியூசிக்குடன் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய டிவில்லியர்ஸுக்கு பால் அபிஷேகம் செய்த – தல அஜித் ரசிகர்கள் – வைரல் வீடியோ

ABD

தென்னாபிரிக்க அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நேற்று அவரது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் அதிரடி ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அந்த அன்பான ரசிகர்கள் மூலம் அவருக்கு கிடைத்த பெயர் தான் மிஸ்டர் 360.

Devilliers

பெங்களூரு ராயல் சேலன்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் ஐ.பி.எல் போட்டிகளில் அணைத்து முன்னணி பந்துவீச்சாளார்களையும் நாலாபுறமும் சிதறவிட்டுட்டு காட்டுடி அடித்ததை நாம் பார்த்துள்ளோம். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்நிலையில் நேற்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிய டிவிலியர்ஸ்க்கு பெங்களூருவை சேர்ந்த தல அஜித்தின் ரசிகர்கள் நேற்று டிவில்லியர்ஸின் உருவப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்து அசத்தினர். பின்புறம் மங்காத்தா மியூசிக் ஒலித்துக்கொண்டிருந்தது. இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த வீடியோ இப்போது டிவில்லியர்ஸின் ரசிகர்களால் அதிக அளவு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வருடம் பெங்களூரு ராயல் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

மைதானத்தில் இருந்த சேரை அடித்து நொறுக்கிய விஷயத்தில் தண்டனை பெற இருக்கும் ஆரோன் பின்ச் – தண்டனை விவரம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்