ஒருவர் தன்னுடைய தோஷ நிவர்த்திற்காக கொடுக்கும் தானப் பொருட்களை மற்றவர்கள் வாங்கிக் கொள்வது சரியா? தவறா?

vasthira-dhanam2
- Advertisement -

தானம், தர்மம் செய்வது எல்லாம் நாம் செய்த பாவங்களுக்கு உரிய பரிகாரங்கள் என்கிறது ஆன்மீகம். ஒருவர் மனமுவந்து மற்றவர்கள் துன்பப்படும் பொழுது சட்டென தன்னிடம் இருக்கும் பொருட்களைக் கொடுத்து தானம் செய்வது தானத்தில் சிறந்த புண்ணிய தானம். புண்ணியம் சேர வேண்டும் என்பதற்காகவே செய்யப்படும் தானங்களும் உண்டு. தானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும், பாவம் குறையும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அதற்காகவே தானம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அல்லது ஒரு சிலர் தங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை நிவர்த்தி செய்ய தானத்தை செய்வது உண்டு. இப்படி தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் ஒரு சில தானங்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்வது சரியா? தவறா? என்கிற குழப்பம் இன்று பக்தர்களிடையே பெரும்பாலும் இருந்து வருகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த பதிவு. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

jathagam astro

ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள் சரியாக இருந்தால் தான் அவருடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும். தசா புத்திகளும், கிரக அமைப்புகளும் அசுப பலன்களை கொடுக்கும் பொழுது ஜோதிடர் தான, தருமங்களைச் செய்யச் சொல்வார்கள். இதற்காக சில பொருட்களை தானம் செய்வது உண்டு. அப்படி செய்யப்படும் தானங்களை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள சில சமயங்களில் சங்கடப்படுவது உண்டு.

- Advertisement -

அதுவும் விலை உயர்ந்த பொருட்கள் போன்ற விஷயங்களை தானம் செய்ய, அவற்றை பெற்றுக் கொள்வதற்கு மற்றவர்கள் கட்டாயம் சங்கடப் படுவார்கள். இதில் மங்கல பொருட்களை கொடுக்கும் பொழுது எந்த விதமான ஆட்சேபமும் கூறாமல் உள்ளம் நிறைவுடன் அந்த தானத்தை மற்றவர்கள் எளிதாகப் பெற்றுக் கொண்டு விடுவார்கள்.

vetrilai-pakku-pazham

வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள், மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு போன்ற தானங்களை செய்யும் பொழுது அதனை பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் அதனை பெற்றுக் கொண்டு விடுவது உண்டு. ஏனென்றால் மங்கலப் பொருட்களை தானம் செய்யும் பொழுது வேண்டாம் என்று கூறக் கூடாது, அப்படி வேண்டாம் என்று கூறினால் நம்மிடம் இருக்கும் லக்ஷ்மி நம்மை விட்டுச் சென்று விடுவதாக ஐதீகம் உண்டு. எனவே இவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்ளும் நாம் விலை உயர்ந்த பொருட்கள் எனும் பொழுது சங்கடப்படுவது ஏன்?

- Advertisement -

புடவை அல்லது மற்ற வஸ்திரங்கள், சற்று விலை உயர்ந்த பொருட்களை தோஷ நிவர்த்தி செய்ய மற்றவர்கள் கோவிலில் தானம் செய்யும் பொழுது அதனை நாம் போய் பெற்றுக் கொள்ள வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. எந்த பொருளையும், எந்த தானத்தையும் நாம் வாங்குவதன் மூலம் நமக்கு எந்த ஒரு தோஷமும் வரப் போவது இல்லை. ஒருவருடைய தோஷத்தை போக்க நாம் உதவி செய்தால் நமக்கு அது புண்ணியம் தானே, தவிர எந்த ஒரு பாவமும் இல்லை.

vasthira-dhanam1

ஆனால் அப்படி வாங்க செல்லும் பொழுது அங்கு நம்மை விட வசதி குறைந்தவர்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும் என்று நாம் அமைதியாக இருந்து விடுவது நல்லது. ஒரு புடவையை தானம் செய்யும் பொழுது அதனை நாம் வாங்க செல்லும் இடத்தில் நம்மை விட வசதி குறைந்தவர் இருந்தால் அதனை அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று நாம் அதனைத் தவிர்த்துக் கொள்ளலாம். மற்றபடி எந்த வகையிலும், எந்த தானத்தையும் நாம் தவிர்க்காமல் பெற்றுக் கொள்வது தான் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

- Advertisement -