கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.

வாழ்க்கையில் ஒருவருக்கு பணம் இருந்தால் நிம்மதி இருக்காது. நிம்மதி இருந்தால் பணம் இருக்காது. எல்லாம் ஒருசேர இருந்தால் வாழ்க்கையின் இதையும் தாண்டி கட்டாயம் வேறு ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். எல்லாம் இருந்தால் ஆயுசு குறைவாக இருக்கலாம். ஆக, நம்முடைய ஆயுசைக் குறைத்துக் கொள்வதற்கு பதிலாக, ஆயுசு முழுவதும் ஏதாவது ஒரு பிரச்சனையோடு வாழ்ந்து கொள்ளலாம். பிரச்சனைகளை சமாளித்து வாழ்வது தானே வாழ்க்கை. பிரச்சினைகள் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது.

dhupam

சரி, பண கஷ்டத்தில் கூட ஏதாவது ஒரு வகையில் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நம்முடைய வீட்டில் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாகவே பணம் இருக்கும். ஆனால், நம் வீட்டில் உள்ளவர்களுக்கும், நம் குழந்தைகளுக்கும் ஒரு நல்லதை கூட செய்து பார்க்க முடியாது. சந்தோஷமாக இருக்க முடியாது. வீட்டில் விசேஷத்தை தொடங்கினாலே போதும் பிரச்சினை ஆரம்பித்துவிடும். நாலுபேர் கூடி அமர்ந்து சாப்பிட்டாலும் பிரச்சனை வந்துவிடும். சொந்தபந்தங்கள் கூடி விசேஷங்களில் கலந்து இருந்தாலும் பிரச்சினைகள் வரும்.

குறிப்பாக குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாது. வீட்டில் பூஜை புனஸ்காரங்களை செய்ய முடியாது. தேவையற்ற மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் நம்மை வாட்டி வதைக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு நம்பிக்கை உள்ளவர்கள் ஏவல், பில்லி, சூனியம், கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் எப்படி வேண்டுமென்றாலும் பெயர் வைத்துக்கொள்ளலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் இது நம்முடைய நேரம், விதி இப்படி என்று எதையாவது சொல்வார்கள்.

kettasathi-1

உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

- Advertisement -

நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.

devadharu

அதன் பின்பாக 48 நாட்கள் தொடர்ந்து கட்டி சாம்பிராணியோடு மற்ற மூன்று பொருட்களை தூபம் போட்டு வர வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒருசேர ஒரே அளவில் ஒரு பாட்டிலில் கலந்து வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளில் இந்த பொருட்கள் எல்லாம் பொடியுகவே கிடைக்கின்றது. இந்தப் பொடியை நீங்கள் போடத் தொடங்கிய நாளிலிருந்து 48 நாட்களுக்குள் நீங்கள் நிச்சயம் நம்பமுடியாத அளவிற்கு அதிசயம் உங்கள் வீட்டில் நடக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு வயிற்றுக்கு யாராவது மருந்து கொடுத்து இருந்தால் கூட, இந்த புகையை சுவாசிக்கும் போது அந்த மருந்து செயலிஜக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

மிகவும் அற்புதமான பல விஷயங்களின் பொக்கிஷம் தான் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் மூலிகைகள். இந்த மூலிகைகளின் அருமை பெருமைகளை நாம் தெரிந்து கொள்வதே கிடையாது. கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஆற்றல் வாய்ந்த பொடிகள் தான் இந்த 3 பொடிகளும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த முறையை பின்பற்றி பயன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
குபேர பகவானை வசியம் செய்வதில் உள்ள தந்திரம் இதுதானோ! பணத்தை சேர்ப்பதில், வட இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசிய சூட்சமத்தை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.