உங்கள் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அடியோடு விரட்ட ஒரு டம்ளர் தண்ணீரை மட்டும் வீட்டில் இந்த பகுதியில் தவறாமல் வைத்து விடுங்கள்

water-thirusti
- Advertisement -

கணவன், மனைவி, குழந்தை என்று அழகான குடும்பம் இருந்தாலும் சில சமயங்களில் இந்த சிறிய குடும்பத்திலும் பிரச்சனை வர ஆரம்பித்துவிடும். அப்படி இல்லாமல் தாத்தா, பாட்டி, மாமா, மாமி, சித்தி, சித்தப்பா என்று கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் இந்த குடும்பத்திலும் திடீரென பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும். குடும்பம் சிறியதா பெரியதா என்ற கேள்வி இல்லை. அந்த குடும்பத்தினீ மீது மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதே முக்கிய காரணமாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்லவர்களாக, சந்தோஷமாக இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பொறாமை குணம் அந்த குடும்பத்தின் மீது கண் திருஷ்டியை உண்டாக்குகின்றது. இதனால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பம் சண்டை பிரச்சனை உண்டாகிறது. இதுபோன்ற துர் சக்திகளை அடியோடு விரட்ட ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

lemon

கோவிலுக்கு செல்லும் போது அனைவரும் எலுமிச்சை பழம் வாங்கிச் செல்வதை கவனித்திருப்போம். அந்த எலுமிச்சை பழம் இறைவனின் பாதத்தில் வைத்து கொடுக்கப்படுகிறது. இதனை வீட்டில் வைப்பதன் மூலம் ஒரு மன திருப்தி ஏற்படுகிறது. இறைவனின் அருள் நமது வீட்டில் நிறைந்து இருப்பது பான்ற எண்ணம் தோன்றுகிறது. பொதுவாகவே எலுமிச்சை பழத்திற்க்கு உட்கிரகிக்கும் திறன் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த எழுமிச்சை பழத்தை கோவிலில மட்டும் தான் வாங்கி வைத்து வேண்டிய அவசியம் என்று ஒன்றும் கிடையாது அதனை நமது வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம் எலுமிச்சை பழங்களை எப்பொழுதும் ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது இப்படி வைப்பது நல்ல பலனைக் கொடுக்கிறது.

lemon

எப்பொழுதும் மூன்று எலுமிச்சை பழங்களை பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒன்றை சமையலறையிலும், மற்றொன்றை படுக்கையறையிலும், மற்றொன்று வீட்டின் ஹால் பகுதியிலும், மீதமிருக்கும் ஒன்றை வாசலில் கட்டியும் வையுங்கள். இந்த ஒவ்வொரு எலுமிச்சை பழத்தையும் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் மூழ்குமாறு போட்டு வையுங்கள்.

- Advertisement -

சமையலறை, படுக்கையறை,ஹால் இந்த மூன்று இடங்களிலும் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு எலுமிச்சை பழத்தை போட்டு வையுங்கள் இப்படி அனைத்து பகுதிகளிலும் எலுமிச்சை பழத்தை வைத்து மூன்று நாட்கள் கழித்து அவற்றை எடுத்துப் பாருங்கள். அவை சற்று காய்ந்தது போல் இருக்கும். அப்போது அவற்றை எடுத்து வீட்டில் இருக்கும் செடிகளில் போட்டு விடுங்கள்.

lemon-glass

கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை செடியில் ஊற்றி விடுங்கள். செடி இல்லாதவர்கள் தண்ணீரை சமயலறையில் இருக்கும் ஸின்ங்கிலும் எலுமிச்சை பழத்தை குப்பைத் தொட்டியிலும் போட்டு விடுங்கள். இப்படி எலுமிச்சை பழம் அழுகி விட்டது என்றால் பயப்பட தேவை இல்லை. எலுமிச்சை பழம் காய்ந்திருந்தால் வீட்டில் துர்தேவதைகளின் நடமாட்டம் குறைவாக இருப்பதாகவும், எலுமிச்சைபழம் அழுகியிருந்தால் துர் சக்திகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அர்த்தமாகும். இவ்வாறு தொடர்ந்து எலுமிச்சை பழங்களை மாற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் மன அமைதியும் சந்தோஷமும் நிலை கொண்டிருக்கும்.

- Advertisement -