சிவ லிங்கம் ஆண்குறியை குறிக்கிறதா ? உண்மை என்ன ?

sivalingam-1

இறைவனுக்கு உருவம் கிடையாது என்பது பெரும்பாலான மதங்கள் நம்பும் ஒரு கோட்பாடாகும். ஆனால் இறைவன் உருவமுள்ளவனாகவும் அதே நேரத்தில் உருவமில்லாதவனாகவும் இருப்பவனாக இருக்கிறான் என்ற உணர்வுபூர்வமான பிரபஞ்ச உண்மையை உலகிற்கு கூறிய மதம் “இந்து மதம்”. எனவே இந்து மதத்தில் இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களை கொடுத்து வழிபாடு செய்தனர். அப்படி இந்து மதத்தில் இருக்கும் மிகவும் புகழ் பெற்ற உருவ வழிபாட்டு முறை “சிவலிங்க வழிபாட்டு முறை”. இந்த சிவலிங்க வழிபாட்டு முறையைப் பற்றிய சில உண்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

Siva Lingam

இந்த சிவ லிங்கத்தின் தத்துவத்தை முழுதும் அறியாத சில மேலை நாட்டு சரித்திர ஆய்வாளர்கள், இந்த சிவலிங்கம் ஆண் மற்றும் பெண்ணின் இன உறுப்புகளை குறிக்கும் சின்னம் என்று முடிவுக்கு வந்து, அதை பற்றி கட்டுரைகளை எழுதி விட்டனர். மேலை நாட்டவர்கள் எதைச் சொன்னாலும் உண்மை தான் என்று நம்பிய சுய சிந்தனை மற்றும் ஆராய்ச்சிமனப்பான்மை அற்ற நம் நாட்டினர் சிலர் இக்கருத்தை பிரபலப்படுத்தி விட்டனர். ஆனால் இந்த சிவலிங்கத்தை பற்றி “ஸ்ரீ அகத்திய சித்தர்” கூறும் விளக்கம் யாதெனில் “ஒரு மனிதன் படுத்திருக்கும் போது அவனது முகத்தில் “மூக்கு” மட்டும் வானை நோக்கியவாறு உயந்திருக்கும். அப்போது அந்த மூக்கு காண்பதற்கு லிங்கத்தை போன்று தோற்றம் தரும். மனிதன் “ஜீவன்” ஆவான். அவன் சுவாசிக்கும் மூக்கு “லிங்கம்” ஆகும். எனவே இதை “ஜீவன்” அல்லது “சீவன் லிங்கம்” என்று அழைப்பதே முறை. ஆனால் இது காலப்போக்கில் “சிவ லிங்கம்” என்றழைக்கப்பட்டது.

மேலும் இந்த “சீவன் லிங்கத்தில்” இருக்கும் லிங்கப்பகுதி மனிதன் உயிர் வாழ சுவாசிக்க உதவும் மூக்கையும், அந்த லிங்கத்தின் இடையிலிருக்கும் அகலமான பகுதி மனிதன் உயிர் வாழ உணவை உண்ணும் வாயை குறிப்பதாகும். உடல் வாழ சக்தி தரும் உணவை உண்ணும் “வாய்க்கும்”, உயிர் வாழ சுவாசக் காற்றை அளிக்கும் “மூக்கிற்கும்” ஒன்று மற்றொன்றை சார்ந்த தொடர்பிருப்பதால் இந்த சிவலிங்கத்தை “ஆவுடையார்” என்று அழைக்கின்றனர்.

llingam

மேலும் இந்த சிவலிங்கத்தின் அடிப்பகுதி “பிரம்மாவையும்”, இடை பகுதி “திருமாலையும்”, மேல் பகுதி “சிவ பெருமானை” குறிக்கிறது. “பிறப்பு, வாழ்க்கை, இறப்பு” என்ற உலகின் எதார்த்த உண்மையை கூறும் சின்னமாக இந்த சிவ லிங்கம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று நம் முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். ஆனால் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால் இறைவன் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதே விஞ்ஞானிகள் உலகின் எல்லா பகுதிகளிலும் அணுக்கள் நிரம்பி உள்ளது என்று கூறுகின்றனர்.

ஒரு அணுவில் “புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்” என்ற மூன்று மூலக்கூறுகள் இருப்பதையும் நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இதை நமது தமிழ் சித்தர்களும், ஞானிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து. அதுவே உலகம் முழுக்க வியாபித்திருக்கும் இறை சக்தி என்பதை அறிந்து அதற்கு சிவலிங்கம் என்று வடிவம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அணுவில் உள்ள “புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான்” என்பதை குறிக்கும் வகையிலே சிலலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அணு(சிவன், விஷ்ணு, பிரம்மா) இல்லையேல் இந்த உலகம் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும்.

இதையும் படிக்கலாமே:
ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட பெருமாளின் வைரம் – மர்மமாய் உயிரிழந்த ராஜ வம்சம்

English Overview:
Here we described whether Shiva lingam a male organ in Tamil. We all know that somebody says Shiva lingam is a male organ but the truth behind that is different. He described what Shiva lingam exactly means here in Tamil.