நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் காய்கறி சூப்பை வித்யாசமாக ஈஸியாக எப்படி செய்வது? வேற லெவல் டேஸ்டா இருக்கும்! நீங்களும் செஞ்சு பாருங்க.

veg-soup-immune

இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பலரும் தங்களுடைய சமையலில் நிறைய விஷயங்களை புகுத்தி வருகின்றனர். இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட இப்போதெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிடும் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. அதனை சுலபமான முறையில் வெறும் அற்புதமான சுவையில் எப்படி சூப் செய்து சாப்பிடலாம்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். இது சாதாரண காய்கறி சூப் போல் அல்லாமல் சற்று உடலுக்கும், மனதிற்கும் இதமான சுவையை தரும் வித்தியாசமான காய்கறி சூப்பாக இருக்க போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

veg-soup

‘காய்கறி சூப்’ செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1,
கேரட் – 1,
பீன்ஸ் – 3,
பச்சை பட்டாணி – 1/4 கப்,
சோள மாவு – 11/2 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி – ஒரு துண்டு,
பூண்டு பல் – 15,
மிளகு தூள் – 1 டீஸ்பூன்,
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்,
மல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

veg-soup

காய்கறி சூப் செய்முறை விளக்கம்:
முதலில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவை தண்ணீரில் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி மற்றும் பூண்டு பற்களை கொரகொரவென்று இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெண்ணெய் சேர்த்து உருக்கி கொள்ளுங்கள். இதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி போன்ற காய்கறி வகைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அவைகள் அந்த எண்ணெயின் சூட்டிலேயே வெந்து வந்ததும், நான்கு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இதனுடன் அரைத்து வைத்துள்ள சோள மாவையும் மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து ஊற்றிக் கொள்ளுங்கள். சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை கொதிக்க விட்டு காய்கறிகள் கெட்டியான பதத்திற்கு வந்ததும், ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகுத்தூளை சேர்த்து பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

veg-soup1

மிளகுத் தூள், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்ப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியையும், சளி, கபம், தொண்டை புண் போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும். இந்த குளிர்காலத்திற்கு உடலுக்கும், மனதிற்கும் இதமாக இருக்கும் இந்த ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சூப்பை அடிக்கடி வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து நலம் பெறுங்கள். இறுதியாக பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடுங்கள். சுட சுட பரிமாறினால் நிச்சயமாக வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ‘பன்னீர் பட்டர் மசாலா’, அத 10 நிமிஷத்துல ஈஸியா செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.