சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ‘பன்னீர் பட்டர் மசாலா’, அத 10 நிமிஷத்துல ஈஸியா செய்வது எப்படி?

paneer-butter-masala
- Advertisement -

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் பன்னீர் பட்டர் மசாலா தான். இதை பலரும் கடையில் வாங்கி சாப்பிட்டு ருசிக்கிறார்கள். ஆனால் வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஈஸியா பட்டுன்னு பத்து நிமிஷத்துல நாமலே செஞ்சிடலாம். கடையில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் சாப்பிடுவது ஆரோக்கியமான முறையில் இருக்கும். அட்டகாசமான சுவையில் பன்னீர் பட்டர் மசாலாவை வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

panner

கடைகளில் 200 கிராம் அளவு கொண்ட பன்னீர் 80 ரூபாயில் கிடைக்கிறது. இதை கடைகளில் வாங்குவதை விட வீட்டில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். முதலில் பன்னீரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவத்தில் நீங்கள் விரும்பியபடி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். நாலு பேர் கொண்ட குடும்பத்திற்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவு சரியாக இருக்கும்.

- Advertisement -

பன்னீர் பட்டர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம்,
வெண்ணை – 3 டீஸ்பூன்,
வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 150 கிராம்,
பூண்டுப் பல் – 10,

இஞ்சி – 1 துண்டு,
பட்டை – 2,
ஏலக்காய் – 2,
தனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்துக் கொள்ளவும். 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி உருக்கிக் கொள்ளவும். பின்னர் வெட்டிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கி வந்ததும், தக்காளி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் அதில் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி துண்டுகளை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். இவைகள் வேகமாக வதங்க சிறிதளவு உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து விடுங்கள். மூடி வைப்பதால் தக்காளி, வெங்காயம் நன்கு சீக்கிரமாக வதங்கி விடும். 2 நிமிடம் கழித்து வதக்கியவற்றை ஆற வைத்துக் கொள்ளுங்கள். நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

paneer-butter-masala

பின்னர் அதே பேனில் மீண்டும் 1/2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணை ஊற்றி உருக்கிக் கொள்ளவும். அதில் ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து தாளித்து விடவும். அரைத்து வைத்த பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் கரம் மசாலா மற்றும் தனி மிளகாய்த் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.

- Advertisement -

butter-vennai

தேவைப்பட்டால் மூடி வைத்து வதக்கிக் கொள்ளலாம். பின்னர் சிறிதளவு லேசாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மசாலா கலவை நன்கு சுருள வெண்ணை தெளிந்து வதங்கி வந்ததும் வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் கிளறினால் பன்னீர் துண்டு சூட்டிலேயே உடைந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் அதை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

paneer-butter-masala1

இறுதியாக 1/2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை மேலே ஊற்றி, கஸ்தூரி மேத்தி அல்லது கொத்தமல்லி தழை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கினால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா பத்து நிமிடத்தில் தயாராகி விட்டிருக்கும். இதனை சூடான சப்பாத்தியோடு சூடாக சாப்பிட்டால் ஆலாதியான சுவையில் இருக்கும். நீங்களும் வீட்டில் செய்து கொடுத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
ஸ்டார் ஹோட்டல் ஸ்டைல்ல, சூப்பரான வெஜிடபிள் புலாவ்! கஷ்டப்படாம 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -