திருமணத்திற்கான ஜாதக கணிப்பில் தினப்பொருத்தம் ஏன் முக்கியமானது தெரியுமா?

wedding

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யும் போது அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும். எனவே ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் மற்றும் மணமகளுக்கான பொருத்தங்களில் தினப்பொருத்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த தின பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என கூறுவர். திருமண பொருத்தத்தின் போது ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

astro

தினம் என்றால் நட்சத்திரம் எனப் பொருள். நாள்தோறும் சந்திரபகவான் தங்கும் இடம் ஷேத்திரம் என அழைக்கப்பட்டது. இந்த நாள் ஷேத்திரம் என்பதே பின்னாளில் மருவி நட்சத்திரம் என மாறியது. இந்த தினப்பொருத்தம் தாராபலன் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொருத்தம் ஆகும்.

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9 ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அவை அசுப பலனை தரக்கூடியது எனவும், மற்ற எண்கள் சுப பலன்களை தரக்கூடியவை எனவும் கருதப்படுகிறது. பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக இருந்தால், தினப்பொருத்தம் அமைந்துவிட்டது என்று சொல்லலாம். இந்த எண்ணிக்கையுள் இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

jathagam astro

மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால் தினப்பொருத்தம் பொருந்தாது என்பதும் ஒரு ஜோதிட சாஸ்திரத்தின் பொதுவான கணிப்பு.

- Advertisement -

marriage

மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து, மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவது ஒன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது போல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தம் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

astro wheel 1

மணப்பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2, 4, 6, 8, 9 என்று வருகிற பட்சத்தில் மணமக்கள் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என கருதலாம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 26, 27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான்.

marriage

ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் உத்தமமான தினப்பொருத்தம் எனலாம். பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் தினப்பொருத்தம் மத்திமம் எனலாம்.

இதையும் படிக்கலாமே:
மேஷ ராசி, லக்னகாரர்களுக்கு செல்வம் தரும் கிரகங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Dina porutham in Tamil. It is also called as Jathagam kanippu in Tamil or Jothida palangal in Tamil or Thirumana poruthangal in Tamil or Jothida poruthangal in Tamil.