மேஷ ராசி, லக்ன காரர்களுக்கு ஜாதகம் இப்படி இருந்தால் பணம் வந்துகொண்டே இருக்கும்

mesham

முற்காலத்தில் மனிதர்கள் பண்டமாற்று முறையில் அனைத்தையும் வாங்கி, விற்பனை செய்ததால் பணம் என்கிற ஒன்றிற்கு அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நவீன யுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து வியாபாரங்கள், தொழில்கள் அனைத்தும் இயங்குகின்றன. இந்த பணம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசி மற்றும் லக்னங்களுக்கு எத்தகைய தொழில்கள், வியாபாரங்கள் நல்ல லாபங்களை கொடுக்கும் என குறிப்பிட்டிருக்கின்றன. அந்த வகையில் 12 ராசிகளில் முதலாவதாக வருகின்ற மேஷ ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபங்கள் தரக்கூடிய தொழில், வியாபாரம் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

mesham

மேஷ ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் தனலாபங்களை தரக்கூடிய கிரகமாக இருக்கிறார். அந்த சுக்கிரன் ஜாதகத்தில் இன்ன பிற கிரகங்களோடு இணைந்திருப்பதால் எத்தகைய வேலை, தொழில், வியாபாரங்கள் மூலம் லாபங்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி, லக்னத்தார்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து இரண்டு கிரகங்களுக்குரிய ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு மருத்துவர் விற்பனை பிரதிநிதி தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். மேலும் பெண்கள் கல்வி ஆசிரியர், பெண்களுக்கான பத்திரிக்கை, கட்டிட வரி வசூல் அதிகாரி, மருத்துவ ஆலோசகர், வழக்கறிஞர், திருமண காண்டிராக்ட் தொழில், தையல் தொழில், உணவு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றில் நல்ல வருமானமும், லாபங்களும் உண்டாகும்.

sukran

சுக்கிரன், சந்திரன் கிரகங்கள் சேர்ந்திருந்தால் திருமணம் மண்டபம் கட்டி வாடகைக்கு விடுதல், இனிப்பு பானங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கட்டிடங்களுக்கு தண்ணீர் வசதி செய்தல், நடன ஆசிரியர், கண்களில் அணியும் கண்ணாடி தயாரிப்பு, அணைகட்டுமான தொழில்நுட்ப அதிகாரி, பெண்கள் அழகு சாதனம் தயாரிப்பு போன்ற தொழில்கள் சிறந்த லாபம் தரும்.

- Advertisement -

சுக்கிரன், சூரியனுடன் சேர்ந்திருந்தால் அரசு சட்டக் கல்லூரி ஆசிரியர், திருமணம் சம்பந்தமான தொழில்கள், அரசு ஆடைகள் தயாரிப்பு, குழந்தைகள் நலத்துறை, இசைக்கருவிகள் தயாரிப்பு, அரசு சட்டத் துறை போன்றவற்றில் வருமானம் ஏற்படும்.

sevvai

சுக்கிரன், செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் தையல் எந்திரம் சரிபார்த்தல், பவள விற்பனை, கட்டிட காண்டிராக்டர், வாகன ஓட்டிகள், வீடு வாகனம் போன்றவற்றை சரி செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

சுக்கிரன், சனி பகவானுடன் சேர்ந்திருக்கும் பட்சத்தில் ஒப்பனை பொருட்கள் தயாரிப்பு, வாகனங்கள் விமானங்கள் வடிவமைத்தல், வெளிநாட்டு ஏற்றுமதி – இறக்குமதி, சமையல் கலைஞர், குளியல் சோப்புகள் தயாரிப்பு, காலனி வடிவமைப்பு, பழைய கட்டிடங்களை சீரமைத்து தரும் தொழில்களால் நல்ல லாபங்கள் ஏற்படும்.

guru

ஜாதகத்தில் சுக்கிர பகவான், குரு பகவானுடன் சேர்ந்திருந்தால் மக்களை ஆன்மிகம் பயணம் அழைத்துச் செல்லும் தொழில், தெய்வீக பாடல்கள் ஒளிக்காட்சிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆன்மிக நாட்டிய நாடகம் ஏற்பாடு செய்தல், இசைப் பள்ளி கல்லூரி ஆசிரியர், பெண்கள் கல்லூரியில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் போன்றவை நல்ல வருமானம் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesham varumanam in Tamil. It is also called as Mesha rasi palan in Tamil or Mesha lagnam palan in Tamil or Jathaga palangal in Tamil or Mesha rasi mesha lagnam in Tamil.