இதுநாள் வரை செய்த பாவத்திற்கான விமோசனத்தை உடனடியாக பெற வேண்டுமா? தீபாவளி அன்று காலை நீங்கள் குளிக்கும் தண்ணீரில் இந்த 3 இலைகளைப் போட்டு குளித்தாலே போதுமே!

oil-bath1

பூமாதேவியின் மகனாக பிறந்து, சாகா வரத்தினை பெற்று, அட்டூழியம் செய்து கொண்டிருந்த அசுரனை வதம் செய்த நாளாக இதுநாள் வரை தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாளில் இப்போது அசுரனாக இருக்கக்கூடிய நம்மிடம் இருக்கும், தீய குணங்களை அழிக்க இறைவனை வேண்டி வரம் பெறலாம். தீபாவளி திருநாள் அன்று பாவ விமோசனம் பெற கங்கா ஸ்நானம் செய்வது தொன்று தொட்டு வந்த பழக்கமாக இருந்து வருகிறது. அதனால் தான், அன்றைய நாளில் எண்ணெய் தேய்த்து, சீயக்காய் பயன்படுத்தி குளியலிட்டு வருகின்றோம்.

oil-bath

எண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய் இல் சரஸ்வதியும், சுடு தண்ணீரில் கங்காதேவியும் குடியிருப்பதாக ஐதீகம் உள்ளது. மூன்று தேவர்களின் அருள் பெறவே கங்கா ஸ்நானம் செய்யப் படுகிறது. கங்கையில் நீராடினால் பாவம் விமோசனம் கிடைப்பது போல் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்வதும், பாவத்திலிருந்து விமோசனம் பெற்று, புதிய துவக்கத்தை துவங்கலாம். அனைவராலும் நேரடியாக கங்கைக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது என்பது முடியாத காரியம். அதற்கு வீட்டிலேயே என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

குளிக்கும் தண்ணீரில் துளசி, வில்வம், வேப்பிலை, இந்த மூன்று இலைகளையும் போட்டு குளிப்பதால் கங்கா ஸ்நானம் செய்வதற்கு இணையாக பாவிக்கப்படுகிறது. இந்த மூன்று இலைகல் தெய்வீக சக்தி கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தீபாவளி அன்றைய நாள் மட்டுமாவது, பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து முடித்து விடவேண்டும்.

thulasi-theertham

தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் இவ்வாறு கங்கா ஸ்நானம் செய்வதால் நம்முடைய கர்ம வினைகள் குறையும் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்த பாவங்கள் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பிரம்ம முகூர்த்தத்தில் குளிப்பதால் சுடு தண்ணீர் வைத்து தலையில் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, சீகக்காய் பயன்படுத்தி மூலிகை கலந்த தண்ணீரில் குளிப்பது சகல நோய்களும் நீங்கி, மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அப்புறப்படுத்தப்படும்.

- Advertisement -

தீபாவளி ஒரு நாள் மட்டும் கங்கா ஸ்நானம் செய்தால் பாவங்கள் நீங்கி விடுமா? பல மகான்களும், நீங்களும் கூட எவ்வளவோ பாவங்களை செய்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் முழு இறைவழியில் ஈடுபட்ட பின் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய சக்தியும் உயருகிறது.

vilvam

அதே போல தான் நாம் இதுவரை எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், அதை மனமார வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்கக் கூடிய அற்புதமான நாளாக தீபாவளி நாள் இருக்கிறது. இன்றைய நாளில் இருந்து புது மனிதனாக வாழ விரும்புபவர்கள், பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து எண்ணெய் தேய்த்து மூன்று மூலிகை இலைகளை வெந்நீரில் கலந்து, சிகைக்காய் போட்டு தேய்த்து குளித்துவிட்டு சூரியன் உதயமானதும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

diwali

அதன் பின்னர் பூஜைகள் வழிபாடுகள் செய்து புத்தாடை தரித்து பலகாரங்களை சுவைத்து, மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் இன்றோடு வெடித்து சிதற, பட்டாசுகள் வெடித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடலாம். இதுவரை நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் எவ்வளவு அவமானங்களை சந்தித்து இருந்தாலும் இந்த தீபாவளிக்கு பிறகு நல்ல ஒரு இறை நெறியோடு பயபக்தியுடன் உங்களது வாழ்க்கை பயணத்தை நடத்தினால் இனிவரும் காலங்களில் நிச்சயம் வசந்தத்தை காணலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.