- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீபாவளி அன்று செய்ய வேண்டிய குபேர பூஜை 2024

தீபாவளி அன்று செய்ய வேண்டிய குபேர பூஜை 2024

- Advertisement -

ஒரு சில வருடங்களுக்கு முன்பு தீபாவளி என்றால் குபேர பூஜை, லட்சுமி பூஜை செய்யக்கூடிய வழக்கம் நம்மிடத்தில் இல்லை. வடமாநிலத்தவர்கள் தீபாவளி அன்று குபேரரையும் லட்சுமியையும் வழிபாடு செய்வார்கள். ஆனால் இப்போது நம்முடைய நாட்டிலும் இந்த வழிபாட்டு முறைகள் மிகவும் பிரபல்யமாகிவிட்டது.

குபேர சிலை, குபேரர் திரு உருவப்படம், குபேரர் நாணயம், குபேரர் விளக்கு இவைகளை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு தீபாவளி அன்று மாலை இந்த லக்ஷ்மி குபேர பூஜையை நம் தமிழ்நாட்டில் இருப்பவர்களும் செய்து வருகிறார்கள். தவறு கிடையாது. இறை வழிபாடு என்பது எல்லோருக்கும் பொதுப்படையானது. இதை அவர்களுக்கு, இவர்களுக்கு என்று பிரிப்பதற்கு மனிதர்களுக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது.

- Advertisement -

ஆகவே உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய வீட்டிலும் நீங்கள் நாளைய தினம் இந்த லட்சுமி குபேர பூஜையை கோலாகலமாக செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய வீட்டில் செல்வ மடங்கு பல மடங்காக கொழிக்கும். ஆனால் எல்லோராலும் நாளைய தினம் இந்த லக்ஷ்மி குபேர பூஜையை முறையாக செய்ய முடியாது.

சிலபேர் வீடுகளில் குபேர விளக்கு, சிலை, குபேரர் படம் குபேரன் நாணயம், இதெல்லாம் இருக்காது. சில பேர் வீட்டில் பெரியவர்கள் இந்த பூஜை செய்வது நம் வீட்டில் வழக்கம் இல்லை என்று கூட சொல்லி விடுவார்கள். ஆனாலும் எங்களுக்கும் லட்சுமி குபேரரின் ஆசீர்வாதம் தேவை எங்களுடைய வீட்டிலும் செல்வ கடாட்சம் உயர வேண்டும் என்றால் நாளைய தினம் மிக மிக எளிமையாக குபேரரை நம் வீட்டிற்கு எப்படி அழைப்பது?

- Advertisement -

கவலைப்படாதீங்க இந்த ஒரு பொருளை கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால், குபேரர் வந்து உங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுக்கான செல்வ வளத்தை வாரி கொடுப்பார். அது என்ன பொருள் தெரியுமா? எளிமையாக நாம் எல்லோருக்கும் கிடைக்க கூடிய அருகம்புல் தான் அந்த பொருள்.

எளிய குபேர பூஜை

நாளை மாலை வழக்கம் போல வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வழக்கத்தை விட கூடுதலான விளக்கு தீபாவளி அன்று வீட்டில் ஏற்றினால் சிறப்பு. அந்த தீப ஒளி போல உங்களுடைய வீட்டில் மகிழ்ச்சி பிரகாசமாகும் என்பது நம்பிக்கை. இனிப்பு பொருட்கள் நெய்வேதியமாக வைக்க வேண்டும். இரண்டு லட்டு நாளைய தினம் நெய்வேதியமாக வைப்பது சிறப்பு.

- Advertisement -

கொஞ்சம் அருகம்புல் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கையில் குபேர முத்திரை வைக்க வேண்டும். கட்டைவிரல் ஆள்காட்டி விரல் நடுவிரல் இந்த மூன்றையும் சேர்த்து வைப்பது தான் குபேர முத்திரை. இந்த மூன்று விரல்களுக்கும் நடுவே அந்த அருகம்புல்லை வைத்து ‘ஓம் குபேராய வசிய’ என்ற இந்த மந்திரத்தை 1008 முறை சொல்ல வேண்டும். 108 முறை எல்லாம் கணக்கு கிடையாது.

இந்த தீபாவளி நாளில் 1008 முறை இந்த மந்திரத்தை சொல்லி அந்த அருகம்புல்லை கொண்டு போய் பீரோவில் வைத்தால் நிச்சயம் உங்களுடைய வீட்டிலும் தேவைக்கு ஏற்ப பணப்புழக்கம் வரும் என்பது நம்பிக்கை. அருகம்புல்லுக்கு குபேரரை வசியம் செய்யக்கூடிய தன்மை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபாவளிக்கு எதுவுமே எங்களால் செய்ய முடியவில்லை.

இதையும் படிக்கலாமே: தீபாவளி அன்று செய்ய வேண்டிய முருகன் பரிகாரம்

பெரிய அளவில் மகாலட்சுமி பூஜை செய்ய முடியவில்லை என்பவர்கள் இந்த சிறு பூஜையை செய்து பாருங்களேன். அடுத்த வருடம் ஜாம் ஜாம் என லட்சுமி குபேர பூஜை உங்களுடைய வீட்டில் நிச்சயம் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்