யாரையும் நம்பி ஏமாறாமல் இருக்கணும்னா, இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க!

yematram

நம்மில் பலபேருக்கு மற்றவர்களை நம்பி ஏமாந்த அனுபவம் நிறைய இருக்கும். பணம், சொத்து இவைகளை இழப்பதை விட, நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, உடையும் போது தான், எல்லாவற்றையும் இழந்தது போல, இடிந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுவோம். அந்த இழப்பு நமக்கு தொடர் தோல்விகளை தந்துவிடும். அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கஷ்டம். நாம், மனமுடைந்து போகும் அளவிற்கு எந்த விஷயத்திலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றால், யாரையும், எந்த விஷயத்திலும் நம்பி ஏமாறக்கூடாது? எப்படிப்பட்ட குணம் கொண்டவர்களை எல்லாம் நம்பவே கூடாது. என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sad-couple

பிரச்சனை என்று நீங்கள் உங்களுடைய நண்பர்களிடத்தில் சொன்னாலும் சரி. அல்லது நெருங்கிய உறவுகளிடம் சொன்னாலும் சரி. அவர்கள், உங்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்களாக இருந்தால், அவர்களே அதற்கான தீர்வாக மாறிவிடுவார்கள். உண்மையான அன்பு இல்லாதவர்கள் தீர்வுக்கான வழி, அங்கு இருக்கிறது! இங்கு இருக்கிறது! என்று சொல்வார்கள். ஆனால், அந்த வேலையை உங்களுக்காக துணிச்சலோடு இறங்கி செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களை நம்பினாலும், நிச்சயம் ஏமாற்றம் உண்டாகும். ‘அன்பா, இருக்கிறவங்க எல்லாருமே உண்மையா இருப்பாங்கன்னு சொல்லிவிட முடியாது. உண்மையான அன்பு என்பது எதையும் செய்யத் துணியும்.’ இதற்காக, தீர்வுக்கான வழியைக் காட்டுபவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று சொல்வதாக அர்த்தமில்லை. சில பேர் உதவி செய்யும் இடத்தில் இருந்தாலும் கூட, நமக்கு எதுக்கு பிரச்சனை என்று விலகிச் செல்வார்கள்!

சில பேர் எல்லாம் பிரதிபலனை எதிர்பார்த்து உதவி செய்வார்கள். அதாவது ‘நீ எனக்கு உதவி செய்வதற்கு, பதிலாக இந்த உதவி’. என்பது ஒரு முதல் ரகம். சிலபேரெல்லாம், சிலருக்காக எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உதவியை செய்வார்கள். “நம்ம உதவி செஞ்சவங்ககிட்டருந்து, கட்டாயம் அந்த உதவிக்கான பிரதிபலன் கிடைக்கவே கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட மனதார அந்த உதவியை செய்வதுதான் உண்மையான உதவி.” இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்களை முழுமையாக நம்ப முடியும்.

sad

இதில் இன்னொரு ரகமும் இருக்கிறார்கள். சுற்றி இருப்பவர்களிடம், நல்ல பேர் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு ஓடி ஓடிப் போய் உதவி செய்வார்கள். இவர்கள் எல்லாம், தாங்கள் செய்த உதவியை ஒன்றுக்கு பலமுறை மற்றவர்களிடம் சொல்லி காண்பித்துக் கொண்டே இருப்பார்கள். தயவுசெய்து இப்படிப்பட்டவங்ககிட்ட உதவி வாங்காதீங்க! இப்படிப்பட்ட எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் யாருக்கும் உதவி செஞ்சு ஏமாத்தாதீங்க.

- Advertisement -

இறுதியாக ஒன்று. உங்கள் மீது உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் என்றால், உங்களை ஏமாற்ற கூடாது என்று நினைப்பவர்களாக இருந்தால், எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும் முன்பாகவே உங்களிடம் சொல்லி விடுவார்கள். அப்படி உங்களுக்கு தெரியாமல் செய்து மாட்டிக் கொண்டால் கூட, மாட்டிக் கொண்ட அந்த சமயமே, அந்த உண்மையை உங்களிடம் ஒத்துக் கொள்ளவேண்டும்.

Ragasiyam

“ஆனால் சில பேர், சிலருக்கு தெரியாமல், பல வேலைகளை செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் மழுப்பி பேசுவார்கள். இப்படி, தான் செய்த தவறுகளை மறைப்பவர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும்.”

எல்லோரிடமும் நல்ல மனது இருக்கின்றது. அந்த மனதில் கோபமும் இருகின்றது. சந்தோஷமும் இருக்கின்றது. ஒருவிதமான பயமும் இருக்கின்றது. தேவை என்று வரும்போது ஏற்றுக்கொள்வதும், தேவையில்லை என்று வரும் போது, ஒன்றை தூக்கிப் போடுவதும் மனதின் இயல்பு தான். நிலையற்ற இப்படிப்பட்ட மனதை ஒருநிலைப்படுத்தி எப்படி வாழ்வது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

நீங்க, உங்க மனசாட்சி கிட்டயே கேட்டு பாருங்க! இந்த தவறை எல்லாம் நீங்கள் செய்திருந்தால் இனி கட்டாயம் செய்யக்கூடாது என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கு நல்லது. நீங்கள் அடுத்தவர்களை நம்பி ஏமாந்து இருந்தால், அந்த நபரிடம் இருந்து சற்று விலகி இருங்கள். இது உங்களுக்கு நல்லது.

இதையும் படிக்கலாமே
பெண்களுடைய புருவம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா! துரதிர்ஷ்டசாலிகளா! என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have udhavi. udhavisei. ematram