பெண்களுடைய புருவம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா! துரதிர்ஷ்டசாலிகளா! என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

beautifull-eyes

பொதுவாகவே, பெண்களைப் பற்றி புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. சில சாஸ்திர குறிப்புகளும், சாமுத்திரிகா லட்சணமும் பெண்களின் அங்கங்களை வைத்து பலவகைப்பட்ட குறிப்புகளை சொல்லி வைத்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு பெண்ணின் முகம் அம்சம் இப்படி இருந்தால், அந்தப் பெண்ணின் குணநலன் இப்படித்தான் இருக்கும் என்றும் நம்முடைய முன்னோர்களால், சில குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

eybrow-1

சாதாரணமாக ஒரு பெண் சந்தோஷமாக இருக்கின்றாளா? துக்கமாக இருக்க இருக்கின்றாளா? கோபமாக இருக்கின்றாளா? என்பதை அவளுடைய முகத்தை வைத்து, ஓரளவு கணித்து விடலாம். இதையெல்லாம் தாண்டி, அந்தப் பெண்ணினுடைய பிறவி குணாம்சம் என்பது, எப்படி இருக்கும் என்று சொல்லுவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். அந்த கடினமான விஷயத்தையும் சுலபமாக்கி சில குறிப்புகள் நமக்கு தரப்பட்டுள்ளன. அதை எப்படி கண்டுபிடிப்பது? என்பதை பற்றிதான் தெரிந்துகொள்ள போகின்றோம்.

அடர்த்தியான புருவங்களைக் கொண்ட பெண்களை பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம். அடர்த்தியான புருவத்தைக் கொண்ட பெண்கள், அடுத்தவர்களது நலனில் மிகவும் அக்கறையாக இருப்பார்கள். இவர்கள், எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அதிகப்படியான வரவேற்பும், அதிகப்படியான மதிப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது இவர்கள் ஏதாவது ஒரு இடத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால், அனைவராலும் ரசிக்கப்படும் அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் அமையும். இப்படிப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய நபர்களும், சந்தோஷமாகத் தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும், நல்ல சுக போக வாழ்க்கை அமையும் என்றே சொல்லலாம். ஆக மொத்தத்தில் இவர்களை தேவதை என்று கூட சொல்லலாம்.

சில பெண்களுக்கு புருவம், சற்று சாய்ந்ததாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ரொம்பவும் உஷாராக இருப்பார்கள். அவர்களுடைய எதிர்காலத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். சுயமாக சிந்தித்து முன்னேறுவதில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் முன்னேற்றம் அதிவேகமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் பெரும்பாலும் உயர் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

மெல்லிய புருவம் கொண்ட பெண்கள். இவர்கள் கொஞ்சம் சுயநலவாதிகள் தான். இருப்பினும் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுயநலத்திற்கு பின்பு, பிறர் நலம் என்று எண்ணுபவர்கள். குடும்பத்தோட ஒட்டி இருக்க மாட்டாங்க! குடும்ப உறவினர்களிடமிருந்து சற்று தள்ளியே இருப்பார்கள். தன்னுடைய காரியம் ஆக வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யும் அளவிற்கு துணிச்சல் உடையவர்கள். தன்னுடைய வெற்றிக்காக அடுத்தவர்களுக்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்று கொஞ்சம் நினைப்பாங்க. அவ்வளவுதான். மெல்லிய புருவம் இருப்பவர்களெல்லாம் சண்டைக்கு வரவேண்டாம். சாஸ்திரம் இப்படி சொல்கிறது அவ்வளவுதான். நீங்கள் மெல்லிய புருவம் கொண்டு நல்லவர்களாக இருந்தாலும் சந்தோஷம்.

பெண்களுடைய கண்கள் என்றாலே அழகுதான். அதிலும் கொஞ்சம் குண்டு குண்டாக துறுதுறுவென்று இருக்கும் கண்கள் இருந்தால், அவர்களுடைய குணாதிசயமும் அழகாகத்தான் இருக்கும். அவரைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்திருப்பார்கள். கலகலப்பாக பேசுவார்கள். நகைச்சுவை உணர்வை கொண்டிருப்பார்கள். இவர்களுடன் இருப்பது மன நிறைவைத் தரும். எல்லோராலும் விரும்பக்கூடிய நபராக அந்தப் பெண் இருப்பாங்க, என்பதில் சந்தேகமே இல்லை. இவங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்குங்க. சில பெண்களுக்கு கண்கள் ப்ரவுன் நிறத்தில் இருக்கும் இப்படிப்பட்ட பெண்கள் எல்லோருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பார்கள்.

ஒரு பெண் தன்னுடைய நெற்றியை சுரக்கும் போது அதில் நான்கிலிருந்து ஐந்து கோடுகள் விழுந்தால் அவர்களது சிந்தனை சுதந்திரமாக இருக்கும். தங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை தாங்களே எடுத்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெத்தியில் சுருக்கம் இல்லாத பெண்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

women

ஒரு பெண்ணினுடைய உதடு கொஞ்சம் தடிமனாக இருந்தால், கொஞ்சம் பழி வாங்குகின்ற குணம் இவர்கள் இடத்தில் இருக்கும். யார் சொல்றதையும் காதில வாங்க மாட்டாங்க. இவர்கள், அவர்களுடைய இஷ்டம் போல தான் நடப்பார்கள். ‘பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருக்கக் கூடாது’ என்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இவர்களிடத்தில் சொல்ல முடியாது. அவர்களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து விடுவார்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.

மெல்லிய உதடுகளை கொண்ட பெண்கள் குடும்பத்தை அனுசரித்து செல்வார்கள். சாந்தமாக இருப்பார்கள். எல்லோராலும் விரும்பக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான பெண்ணாகத்தான் இவர்கள் இருப்பார்கள். பிரச்சினை என்று வரும்போது ஒதுங்காமல், தன்னால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்யும் மனம் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே
மனைவி ஸ்தானத்தில் இருக்கும் பெண்கள், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள்! திருமணமாகாத பெண்களாக இருந்தாலும் படிக்கலாம். பிற்காலத்தில் உதவும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have women’s eyebrow styles. women eyebrows. female eyebrow arch. natural eyebrow shapes