பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூ வைக்காமல் சாமி கும்பிடலாமா? கூடாதா? தினமும் சாமி கும்பிட இப்படி செய்யுங்கள்!

flowers-pooja-room
- Advertisement -

பூஜை அறையில் சாமி படங்களை அலங்கரித்து பின்பு பூஜைகளை துவங்குவது பெரும்பாலான குடும்பத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. சுவாமி படங்களுக்கு பூ வைக்காமல் சிலருக்கு பூஜைகள் செய்யவே பிடிப்பதில்லை. மலர்கள் இல்லாமல் அந்த பூஜைகள் நிறைந்ததாக இல்லை என்பவர்கள் ஏராளம். இப்படி சுவாமி படங்களுக்கு பூக்கள் வைத்து தான் வழிபட வேண்டுமா? பூ இல்லை என்றால் என்ன செய்வது? என்கிற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணியுங்கள்.

vilakku-poojai

சுவாமி படங்களுக்கு மலர்கள் சாற்றி பின்னர் தீப, தூப, ஆராதனைகள் காண்பிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் சில சமயங்களில் நம்மிடம் பூக்கள் இருக்காது. வெளியில் சென்று வாங்கவும் முடியாத சூழ்நிலை இருக்கும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அடிக்கடி வெளியில் செல்லவும் முடியாது. மழைக்காலங்களில் பூக்கள் வரத்தும் குறையும். இப்படி பூக்கள் இல்லாத சமயங்களில் நாம் எப்படி தான் பூஜைகள் செய்வது? பொதுவாக தினமும் பூஜைகள் செய்வது தான் நமக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். எது இருக்கிறதோ! இல்லையோ! அனுதினமும் நீங்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்து வந்தாலே உங்களிடம் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.

- Advertisement -

மேலும் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் வெளியேறிவிடும். தினமும் பூஜைகள் செய்யும் வீட்டில் துர்சக்திகள் நடமாட்டம் இருக்காது. இதனால் எதிர்மறை ஆற்றல்கள் குறையத் துவங்கும். எனவே பூ இல்லையே, கற்பூரம் இல்லையே, வத்திப்பெட்டி இல்லையே என்று பூஜைகள் செய்வதை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அதிலிருந்து ஓரிரு துளசி இலைகளைப் பறித்து வந்து படங்களுக்கு சாத்தியும் வழிபடலாம். துளசி இலைகளுக்கும் அற்புத சக்திகள் உண்டு. வில்வ இலை, துளசி இலை, வன்னி இலைகள் போன்றவை இருந்தால் அதனை சாற்றி வழிபடலாம்.

karunthulasi2

சரி இது எதுவுமே இல்லை பிறகு நாம் என்ன செய்யலாம்? துளசி இலைகள் கூட இல்லாத வீட்டில் வேறு சில பூக்கள் இருந்தாலும் அதனை சாற்றலாம். செம்பருத்தி, நித்திய மல்லி, ரோஜா போன்றவற்றையும் சாற்றலாம். சரி, இது எதுவுமே இல்லை, நாம் என்ன செய்யலாம்? பூக்கள், இலைகள் என்று எதுவுமே உங்களிடம் இல்லை என்றால் சாதாரண சந்தனத்தை வைத்து கூட நீங்கள் வழிபடலாம். சிறிய கிண்ணத்தில் சந்தனத்தை குழைத்து பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த மணம் முழுவதும் பூஜை அறையில் பரவினால் போதும், சந்தனத்திற்கு அத்தகைய சக்திகள் உண்டு. சந்தன வாசம் மலர்களின் வாசத்திற்கு இணையானது எனவே மலர் இல்லாத சமயங்களில் பூஜைகளை நிறுத்தாமல் சந்தனத்தை குழைத்து பூஜை அறையில் வைத்து விட்டு பின்னர் எப்பொழுதும் போல படங்களை அலங்கரித்து தீப, தூப, ஆராதனைகள் காண்பிக்கலாம். உங்களிடம் கற்பூரம் இல்லை என்றால் கூட ஊதுவத்தி ஏற்றி வைத்தால் கூட போதும். ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றி வைத்தால் கூட போதும். அந்த அளவிற்கு பக்தி மனதில் இருந்தால் போதும், வெளியில் நீங்கள் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பூஜை முடிந்ததும் அந்த சந்தனத்தை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள் வெற்றியே உண்டாகும்.

kalkandu

பூஜையில் நைவேத்தியமாக பெரிதாக எதையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. உலர் திராட்சை அல்லது சர்க்கரை, கற்கண்டு, உடைத்த கடலை, பேரிச்சம்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்று வைத்தால் போதும். கட்டாயம் தண்ணீர் வைக்க வேண்டும். பழ வகைகள் வாழைப்பழம், கொய்யா பழம், ஆப்பிள், மாதுளை என்று உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை வைக்கலாம். எதுவுமே இல்லை என்றால் எலுமிச்சை பழத்தை வைக்கலாம். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக இப்படி தினமும் நாம் மனதார பிரார்த்தித்து கொண்டாலே போதும், நம்மிடம் எந்த விதமான துர் ஆற்றல்களும் நெருங்கக் கூட செய்யாது. எப்பொழுதும், எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை நாம் எதிர்த்துப் போராடும் தன்னம்பிக்கை வளரும்.

- Advertisement -