குல தெய்வ கோவிலில் யாரை முதலில் வணங்க வேண்டும்?

kula-dheiva-kovil

குலதெய்வம் என்பது ஆன்மீக ரீதியாக ஒருவரின் முதன்மையான தெய்வமாக கருதப்படுகிறது. குல தெய்வத்திற்கு நிகரான சக்தி வேறெந்த தெய்வத்திற்கும் இல்லை என்பது நாம் அறிந்ததே.

மற்ற கோவில்களை போல் அல்லாமல் பெரும்பாலான குலதெய்வ கோவில்கள் சிறிய கோவில்களாகவே இருக்கும். அங்கு மற்ற தெய்வங்களுக்கு என தனி தனி சன்னதி இருப்பதில்லை. அனால் இந்து மத வழிபாட்டின் படி விநாயகரே முதற் கடவுள். அவரை வணங்கிய பின்னரே மற்ற தெய்வங்கள் அனைத்தையும் வணங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

குலதெய்வ கோவில்களில் விநாயகர் சன்னதி இருந்தால் அவரை வணங்கிய பின்னரே குலதெய்வத்தை வழிபட வேண்டும். விநாயகர் சன்னதி இல்லாத பட்சத்தில் அவரை மனதில் நினைத்துக்கொண்டு வணங்கி விட்டு பின்பு குலதெய்வ பூஜையை தொடங்கலாம்.

இதற்கான காரணம் என்னவென்றால் சில நேரங்களில் தீய சக்திகள் மனித ரூபத்திலோ இல்லை வேறு விதமாகவோ நம் பூஜைக்கு இடையூறு ஏற்படுத்தலாம். அத்தகைய தீய சக்திகளை அடக்கி ஆளும் சக்தி சிவனால் படைக்கப்பட்ட விநாயகருக்கு உண்டு. ஆகவே விநாயகரை வணங்கிய பின் குலதெய்வ வழிபாட்டை தொடங்கினாள் எந்த ஒரு குறையும் இன்றி பூஜை முழுமையாக நிறைவடையும்.