மகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா? கண்டுபிடிக்க என்ன செய்வது?

mahalakshmi-temple

மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கு சில வழிமுறைகளை எல்லாம், நம்மால் முடிந்தவரை பின்பற்றி வருவோம். ஆனாலும் சிலவற்றை என்னதான் தலைகீழாக நின்றாலும் நம்மால் பின்பற்றவே முடியாது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கான அனுகூலமும், நேரமும் நமக்கு வரவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த இறைவனின் ஆசீர்வாதம் இருந்தால்தான் நம்மால் சில பரிகாரங்களை கூட பின்பற்ற முடியும். அதாவது ‘இந்தப் பொருளை வாங்கி வைத்தால் தான் மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள்’ என்று ஒரு பரிகாரத்தை படிக்கின்றோம். அந்த பொருளை நம் வீட்டில் வாங்கி வைப்பதற்கான நேரமே சிலருக்கு வராது. ஏதாவது ஒரு வழியில் அந்த நல்ல காரியம் செய்ய தடை வந்துகொண்டே இருக்கும். கட்டாயம் அப்போது உங்களுக்கு தெய்வ குறை ஏதோ ஒன்று இருக்கிறது என்பது தான் அர்த்தம். சிலர் படித்தவுடன் அந்த பரிகாரத்தை நிறைவேற்றி விடுவார்கள். அப்போது கட்டாயம் அவர்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்பது தான் அர்த்தம். இது நிதர்சனமான உண்மை. இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. குலதெய்வ குறைபாடாக இருந்தாலும், மற்றபடி வேறு எந்த குறைபாடாக இருந்தாலும் ஏதாவது ஒரு தர்ம காரியத்தில் ஈடுபடும் போது, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யும்போது, நிச்சயம் அந்த ஆண்டவனின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துவிடும். இதனால் பரிகாரங்களை செய்ய முடியவில்லையே என்று யாரும் நினைத்து கவலைப்பட வேண்டாம்.

mahalakshmi

அடுத்ததாக கோடீஸ்வரரானால் தான் நிம்மதி கிடைக்கும் என்று எண்ணத்தோடு, நிம்மதி இல்லாமல் வாழ வேண்டாம். நிறைவான வாழ்க்கையை நமக்கு அந்த ஆண்டவன் கொடுத்து இருக்கிறானே! என்று நினைத்து வாழ்ந்தாலே நல்ல வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். இருப்பது ஒரு வாழ்க்கை. தேடல் என்பது அவசியம் தேவை. அதற்காக தேடிக்கொண்டே வாழ்க்கையை முடித்து விடக்கூடாது. ‘இது போதும்’ என்று நினைக்கின்ற மனதும் அவசியம் ஒரு மனிதனுக்கு தேவை. இதை உணர்த்தும் வகையில் பின்வரும் சின்னச்சின்ன விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்து வந்தாலே போதும் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்து விடலாம்.

முதலில் நம்முடைய வீட்டில் குபேரரின் அருளும், மகா லட்சுமியின் அருளும் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் பலவகைப்பட்ட ஊறுகாய்களை குறைவில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பத்து பேர் இருக்கும் வீட்டில் பல வகையான ஊறுகாய்களை வைத்துக்கொள்ளலாம். இரண்டு பேர், மூன்று பேர் உள்ளவர்களது வீட்டில் இதற்கு சாத்தியமில்லை. உங்களால் முடிந்தவரை கட்டாயம் நெல்லிக்காய் ஊறுகாய் உங்கள் வீட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மகாலட்சுமியின் ஆசி இருந்தால் தான் உங்கள் வீட்டில் இந்த நெல்லிகாய் ஊறுகாய் இருக்கும். என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக உங்களது வீட்டின் அருகில் கோவில்களில் வில்வ மரம் இருந்தால் அதை திங்கள் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வாரம் தோறும் தவறாமல் ஐந்து முறை சுற்றி வர வேண்டும். உங்களால் முடிந்தால் 21 முறை சுற்றுவது மிகவும் நல்லது. குறைந்தபட்சம் ஐந்து முறையாவது அந்த வில்வ மரத்தை வலம் வருவது என்பது மிகவும் உத்தமமான ஒன்று. இந்த பாக்கியமும் அனைவருக்கும் கிடைத்து விடாது. யாருக்கு இறைவனின் ஆசீர்வாதம் உண்டோ அவர்களால்தான் இப்படிப்பட்ட பலனை எல்லாம் பெற முடியும். ஏனென்றால் எல்லோரது வீட்டின் அருகில் இருக்கும் கோவிலிலும் வில்வமரம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். முடிந்தவரை இதை பின்பற்றுவது மிகவும் சிறப்பான ஒன்று.

- Advertisement -

அடுத்ததாக வெள்ளிக்கிழமையன்று மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மஞ்சள் நிற பட்டு துணியை அணிந்து கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாதாரண உடையை அணிந்தால் அது மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் தான் நடைபெற்றுள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

yellow-saree

மகாலட்சுமியின் அம்சம் உடையவர்கள் நடக்கின்ற நடையை வைத்தே கண்டுபிடித்து விடலாம். பாதங்களை நாம் எடுத்து வைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. சிலர் பூமாதேவியை அதிரும் அளவிற்கு ‘தொம் தொம்’ என்று நடப்பார்கள். பிறகு கால்களை தரையோடு தேய்த்துக்கொண்டே நடப்பார்கள். இது இரண்டுமே தரித்திரத்தை உண்டாக்கும் என்று மறந்து விடாதீர்கள். பொறுமையாக நடப்பதும் மகாலட்சுமியின் அம்சமே.

இறுதியாக மகாலக்ஷ்மியின் அம்சம் உடையவர்கள் சத்தம்போட்டு பேசவே மாட்டார்கள். அமைதியின் ஸ்வரூபத்தில் மகா லட்சுமி குடியிருப்பாள் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது அமைதி என்பதையும் மறந்து விட வேண்டாம்.

ancient women

நெல்லிக்காய் ஊறுகாய், மஞ்சள் வண்ண பட்டு, வில்வமரம், அமைதியான நடை, சாந்தம் இவைகள் ஐந்தையும் எவரொருவர் பின்பற்றுகிறாரோ, அவர்களிடம் நிச்சயம் மகாலட்சுமி வாசம் செய்கின்றாள் என்பதுதான் அர்த்தம்.

இதையும் படிக்கலாமே
சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi arul pera. Mahalakshmi kadatcham Tamil. Mahalakshmi pariharam. Mahalakshmi valipadu in tamil. Mahalakshmi vasam seiyya Tamil.