சிவராத்திரி அன்று சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?

vilvam-sivan

சிவராத்திரியன்று சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான வில்வ இலையால் அர்ச்சனை செய்ய மறந்து விடாதீர்கள். உங்களது வீட்டில் சிவலிங்கம் அல்லது திருவுருவப் படம் இல்லை என்றாலும் கோவிலுக்கு சென்று கட்டாயம் வில்வ இலையை உங்களின் கைகளால் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்வதன் மூலம் நல்ல பலனை அடையலாம். மகா சிவராத்திரி அன்று வில்வ இலையால் அர்ச்சனை செய்வதன் மூலம் ஏழு ஜென்மத்தின் பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால், எப்படிப்பட்ட பலனை அடையலாம்? என்பதற்கு ஒரு சிறிய வரலாற்று கதையும் உண்டு. அந்தக் கதையை மகாசிவராத்திரியன்று இன்று நாம் தெரிந்து கொள்வோமா? சிவனைப் போற்றும் பாடல்களையும், சிவனின் மகிமைகளைக் கூறும் கதைகளையும், மஹாசிவராத்திரியான இன்று நாம் படிப்பது சாலச் சிறந்தது.

vilvam tree

ஒருநாள் கைலாயத்தில் சிவபெருமானும், உமாதேவியும் வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்து வேத ஆகமங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் வில்வ மரத்திற்கு மேலே அமர்ந்திருந்த ஒரு குரங்கு தன் கைகளை வைத்துக்கொண்டு அமைதியாக இல்லாமல், அந்த வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தது. கீழே இருந்த எம் பெருமானையும், சக்தி தேவியையும் அந்த குரங்கு விடியும் வரை கவனிக்கவே இல்லை.’குரங்கு சேட்டை என்று சொல்வார்கள் அல்லவா அதுதான் இது’.

விடிந்த பின்பு தான் மரத்திலிருந்த குரங்கு, கீழே அமர்ந்திருந்த சிவபெருமானையும் பார்வதி தேவியையும் பார்த்தது. மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டது. ஆனால் அந்த குரங்கிற்கு தெரியவில்லை அன்று சிவராத்திரி என்று!

vilvam

ஆனால் சிவபெருமானோ அந்த குரங்கினைப் பார்த்து ‘நீ தெரிந்தோ தெரியாமலோ சிவராத்திரி அன்று இரவு முழுவதும் வில்வ இலையால் என்னை அர்ச்சனை செய்து என் மனதை குளிர வைத்து உள்ளாய். இதற்கான பலனை நீ அனுபவித்தே ஆகவேண்டும்.’ என்று ஒரு வரத்தை சிவபெருமான் அந்த குரங்கிற்கு அளிக்கின்றார்’. வரத்தைப் பெற்ற குரங்கு மோட்சத்தை அடைந்தது. சிவராத்திரி அன்று வில்வ இலையால் எம்பெருமானை அர்ச்சனை செய்த காரணத்தினால் அந்தக் குரங்கு அடுத்த பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறப்பெடுத்தது.

- Advertisement -

குரங்கு ரூபத்தில் இருந்த ஒரு விலங்கு, தெரியாமல் செய்த வில்வ இலை அர்ச்சனைக்காக பூலோகத்தில் ‘சக்கரவர்த்திக்கு எல்லாம் சக்ரவர்த்தியான முசுகுந்த சக்கரவர்த்தி பிறவியை எடுத்திருக்கின்றது’. இந்த முசுகுந்தச்சக்ரவர்த்தி குரங்கு முகமும், மனித உடலும் கொண்டு சோழ சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

vilvam1

அந்த இறைவனாவன் தன் பக்தர்கள் தனக்காக செய்யும் பூஜையை எந்த ரூபத்தில் செய்தாலும் சரி. எப்படி செய்தாலும் சரி. அதை மனதார ஏற்றுக் கொள்ளும் குணம் படைத்தவனாக இருக்கின்றான். இதனால்தான் எம்பெருமான் இந்த உலகத்துக்கே மூலாதாரமாக திகழ்கின்றாரோ? கள்ளம் கபடம் இல்லாத மனதோடு நாம் எம்பெருமானுக்கு செய்யும் எந்த ஒரு வழிபாட்டையும் முழு முழுமனதோடு அவர் ஏற்றுக் கொள்வார் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே
மகா சிவராத்திரியான இன்று, எம்பெருமானை இந்த மந்திரத்தைச் சொல்லி, இப்படி வழிபட்டால் எல்லா வகையான செல்வமும் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri 2020 in Tamil. Maha shivaratri abhishekam. Maha shivaratri pooja vidhi in Tamil. Maha shivaratri story in Tamil.