பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி தெரியுமா ?

vinayagar
- Advertisement -

தமிழகத்தில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்கள் உண்டு. நம்மில் பலர், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தன் இதுவரை வழிபட்டதுண்டு. அனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

vinayagi

பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேசுவரி, விநாயகி, கணேசினி, கணேஸ்வரி என பல பெயர்களில் வணங்கப்படுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரை இப்போதும் காணலாம். பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தேய்மானமாக காட்சி தருகிறாள் கணேசினி.

- Advertisement -

புராணங்களிலும் விநாயகர் பெண் தெய்வமாக இருந்ததற்கான சில குறிப்புகளை காண முடிகிறது.வடமொழியில் உள்ள ஸ்கந்த புராணத்தில் காசிக் காண்டத்தில் யோகினிகளை விவரிக்கும் பட்டியலில் விநாயகி என்னும் பெயர் இடம் பெற்றிருக்கிறது. பார்வதி தேவி அசுரர்களை அழிக்க காலியாய் மாறியபோது அவர்க்கு உதவியாக இருந்தவர்களே யோகினிகள் என்று அழைக்கப்படுவர். அதில் விநாயகியும் ஒருவர்.

vinayagi

கன்னியாகுமரி குமரியில் உள்ளது போல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் கணேசினியின் திருவுருவம் கோவில் தூணில் காணப்படுகிறது. பெண் உறுப்புகளோடு இங்கும் கணேசினி காட்சிதருகிறாள்.

vinayaki

பண்டைய தமிழர்கள், விநாயகரை பெண் தெய்வமாகவும் வழிபட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் இதில் இருந்து அறிய முடிகிறது. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற கருத்தை உணர்த்தவே இதுபோல் நம் மூதாதையர்கள் செய்தார்களோ என்னவோ தெரியவில்லை.

- Advertisement -