தெரியாமல் கூட யாரும் இந்த 10 தவறுகளை செய்து விடாதீர்கள்! உங்களை துன்பம் கண்டிப்பாக தேடி வரும்.

beg-hungry
- Advertisement -

ஒரு சில தவறுகள் நீங்கள் தெரிந்தோ! தெரியாமலோ செய்யும் பொழுது அது உங்களுக்கு துன்பத்தை தந்து விடும் ஆபத்துக்களும் உண்டு. இந்த விஷயங்கள் செய்தால் துன்பம் வரும் என்பது நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். உங்களுடைய செயல்கள் தான் உங்களுடைய துன்பத்திற்கும் காரணமாக இருக்கும். செய்யும் செயல்களில் கவனமாக இருந்து விட்டால் துன்பங்களுக்கு இடமும் இருக்காது. அந்த வகையில் நமக்கு துன்பம் தரக்கூடிய இந்த 10 செயல்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

eating-food

1. உங்களை மதிக்காதவர்கள் வீட்டில் நீங்கள் எவ்வளவு கொடுமையான பசி இருந்தாலும் சாப்பாடு சாப்பிடக்கூடாது. இதனால் மேலும் உங்களுக்குத் துன்பம் தான் வரும்.

- Advertisement -

2. தர்ம காரியங்களை செய்பவர்களிடம் எதையாவது கூறி அதை தடுக்கும் படியான செயல்களில் ஈடுபடக்கூடாது. இதனால் உங்களுக்கு தீராத துன்பம் வந்து சேரும்.

fight4

3. கட்டிய மனைவியிடமும் கணவனிடமும் வரக்கூடாத ஒரு விஷயம் ‘சந்தேகம்’. நீங்கள் யாரை சந்தேகப்பட்டாலும், உங்கள் துணையை சந்தேகப்பட்டால் இதை விட இழிவான செயல் பூமியில் இல்லை எனலாம். இதனால் உங்களுக்கு நிச்சயம் தீராத துன்பம் மற்றும் அவமானங்கள் வந்து சேரும்.

- Advertisement -

4. எந்த ஒரு விஷயத்திலும் தலைவனாக செயல்படும் உங்களுக்கு சபலம் என்பது வரக்கூடாது. கணப்பொழுது சபலம் வந்தாலும் உங்களுக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வந்து சேரும். கண்ணியம் தலைவனுக்கு அழகு.

dead-death

5. உங்களுக்கு ஒருவர் எந்த அளவிற்கு மோசமான தீங்கை செய்திருந்தாலும் அவர்களுடைய மரணத்தில் மகிழ்ச்சி காண்பது என்பது மிகவும் மோசமான செயலாகும். இதனால் உங்களுக்கு வறுமை உண்டாகும். மீளமுடியாத துயரத்திற்கு ஆளாவீர்கள்.

- Advertisement -

6. இந்த உலகத்தில் மிகவும் கொடுமையான விஷயம் மகன் கண்முன்னே தந்தை அழுவது என்பது தான். உங்கள் கண் முன்னே உங்கள் தந்தை அழ நேர்ந்தால் அதனால் உங்களுக்கு எதிர்பாராத துன்பங்கள் உண்டாகும்.

sad-crying4

7. உங்கள் உடன் பிறந்தவர்களான சகோதர, சகோதரிகளிடம் உங்களுடைய வசதி, வாய்ப்பு, அந்தஸ்துகளை பெருமையாக காட்டிக் கொள்ள கூடாது. இந்த தவறை நீங்கள் செய்தால் உங்களுக்கு தீராத துன்பங்கள் வரும்.

8. ஈன்ற பொழுதினும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் என்பதற்கு மாறாக பிள்ளையின் அவப்பெயரை தாய் கேட்க நேர்ந்தால் அந்த பிள்ளைக்கு கஷ்டங்களும், நஷ்டங்களும் வரக்கூடும்.

sad-crying2

9. நாம் மிகப் பெரிய இடத்திற்கு சென்று நின்றாலும் நம்முடைய வெற்றியின் பொழுது சிறிதும் தலைகணம் இன்றி பணிவுடன் இருப்பது நல்லது. வெற்றியின் பொழுது இறுமாப்பு கொண்டால் கூடவே பிரச்சனைகளும், துன்பங்களும் வரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

10. ஒருவர் நல்ல வசதி வாய்ப்புடன், செல்வ செழிப்புடன் இருந்து விட்டு, அவர்களுக்கு வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறி போவதை நாம் கண்டிருப்போம். அவர்களை வாழ்ந்து கெட்டவன் என்று ஊர் தூற்றும். அது போன்றவர்களை அவதூறாக பேசுவது தீராத வறுமையையும், துன்பத்தையும் உங்களுக்கு தரும்.

இந்த மாதிரியான விஷயங்கள் நாம் தெரிந்து செய்யப்போவது இல்லை. நமக்கே தெரியாமல் கூட நாம் செய்து விடலாம். ஆனால் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த சிறு சிறு விஷயங்கள் கூட உங்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கும். துன்பத்தையும், வறுமையையும் கொண்டு வந்து சேர்க்கும். எனவே எப்போதும் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
பூஜை செய்யும் பொழுது தெரியாமல் கூட இந்த பொருட்களை எல்லாம் வெறும் தரையில் வைத்து விடாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -