வீட்டு பூஜை அறையில் இந்த தவறை மட்டும் செய்துவிட்டால் நம் வாழ்க்கையும் இருள் சூழ்ந்து விடும் தெரியுமா?

pooja-room

ஒவ்வொருவருடைய பூஜை அறையும் தனித்துவமான அம்சங்களை கொண்டிருக்கும். நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பதை உணர வேண்டும். அப்போது தான் மனதில் சஞ்சலங்கள் பெருகாமல் நல்லதொரு பயணத்தை நோக்கிய வாழ்க்கை அமையும். அதற்கு உங்களுடைய பூஜை அறையில் சில விஷயங்களை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் பூஜை அறையில் செய்யக்கூடாத மற்றும் செய்ய வேண்டிய சில தகவல்களைப் பற்றிய பதிவு தான் இது.

pooja-room

பூஜை அறையில் தெய்வ படங்களை விட நீங்கள் வைத்திருக்கும் தெய்வீக பொருட்களுக்கு மதிப்பு அதிகம். பூஜைக்காக நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் முக்கியம். விக்ரகங்கள் எப்போதும் உலோகத்தால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தள்ளு வண்டிகளில் கூட பீங்கான் பொம்மைகள் விற்கப்படுகின்றன. இவைகள் கொழுவில் வைப்பது தான் நல்லது. தவிர பூஜை அறையில் வைத்து தினந்தோறும் பிரார்த்தனை செய்தால் ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பீங்கான் தெய்வ உருவங்களுக்கு எந்த சக்தி ஆற்றல்களும் இல்லை. அதுபோல் பூஜை அறையில் கோமதி சக்கரம் வைப்பவர்கள் 11 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். அதற்கு குறைவாக வைத்திருந்தால் பிரயோஜனம் இல்லை. ஸ்படிக லிங்கம், வெள்ளெருக்கு விநாயகர், கோமதி சக்கரம், தாமரை மணி மாலை, மயிலிறகு போன்றவற்றில் உங்களால் முடிந்த தெய்வீக பொருட்களை வாங்கி உங்களுடைய பூஜை அறையில் வையுங்கள்.

mirror

பூஜை அறையில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பொருளாக கண்ணாடி இருக்கிறது. கண்ணாடி இல்லாமல் பூஜை செய்யாதீர்கள். பூஜைக்கு என்றே தனியாக ஒரு கண்ணாடியை மட்டும் வாங்கி வைத்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையே மாறுவதை நீங்கள் உணர்வீர்கள். பூஜை அறையில் வைக்கப்படும் கண்ணாடிக்கு அதீத சக்தி உள்ளது. எனவே தெய்வ படங்களுக்கு இணையாக முகம் பார்க்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வையுங்கள்.

- Advertisement -

முக்கண் உள்ள தேங்காய் எப்போதும் பூஜை அறையில் இருப்பது மிகச் சிறந்த பலன்களை தரும். நிவேதனமாக தேங்காய் வைக்கலாம், கலசத்தில் தேங்காய் இருக்கலாம் இப்படியாக ஏதாவது ஒரு முறையில் தேங்காயை பூஜை அறையில் வைத்து இருப்பதால் நிறைய நன்மைகள் உண்டாகும். சிவபெருமானின் ஆசியும், விநாயகரின் ஆசியும் கிடைக்கப் தேங்காயை பூஜை அறையில் வைக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு செய்வதால் ஞானம் வளரும் என்பது ஐதீகம்.

kalasam

பூஜை அறையை எப்போதும் பளிச்சென்று வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையாக இல்லாமல் ஸ்டாண்டில் வைத்திருந்தால் கூட இருள் சூழ்ந்த நிலையில் ஒருபோதும் இருந்து விடக் கூடாது. அதற்காகத் தான் பூஜை அறையில் மின்சார விளக்கு ஒளிர விடப்படுகிறது. சிலர் அடுக்கடுக்கான ஸ்டாண்டுகளில் சாமி படங்களை வைத்திருப்பார்கள். அப்படி வைக்கும் பொழுது உள்ளே மேல்தள பகுதியில் வெளிச்சம் இல்லாமல் இருளோடு காணப்படும். இப்படி இருப்பது வீட்டில் கஷ்டத்தை தான் ஏற்படுத்தும்.

pooja-room0

பூஜை அறையில் தெய்வப் படம் முழுவதும் மேலிருந்து கீழாக வெளிச்சம் படும்படியான சூழ்நிலையில் வைக்க வேண்டியது அவசியமாகும். பாதி இருளும், பாதி வெளிச்சமும் இருந்தால் நம்முடைய வாழ்க்கையும் அதுபோல் தான் ஆகிவிடும். வெளிச்சம் வருவதற்கு வழி இல்லாத இடங்களில் மின்சார விளக்கை ஒளிர விடுவது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் துஷ்ட சக்திகள் நுழையாமல் தடுக்கப்படும். பூஜை அறையை வெளிச்சமாக வைத்திருங்கள், உங்கள் வாழ்க்கையையும் வெளிச்சமாக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா? அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்! இதை செஞ்சு பாருங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.