கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை நடக்கிறதா? அப்படின்னா இதுவும் காரணமாயிருக்கலாம்! இதை செஞ்சு பாருங்க.

couple-veppilai-tree

சதா வீட்டில் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த வீட்டில் நிச்சயம் நல்ல அதிர்வலைகள் இல்லை என்பது தான் அர்த்தம். நல்ல அதிர்வலைகள் இருக்கும் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு வாய்ப்புகள் குறைவு தான் என்று சொல்லலாம். மற்றவர்களின் கண்திருஷ்டிகளும் அல்லது வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளும் கணவன், மனைவி பிரச்சினைக்கு காரணமாக பெரும்பாலும் அமைகிறது. இன்னொரு காரணம் உங்களுடைய கிரக நிலைகள் சரியாக இல்லை என்றாலும் திடீரென சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.

ego-couple

சண்டையே போடாமல் இருந்த உங்களுக்குள் திடீரென பிரச்சினைகள் அதிகமாவதற்கு இவற்றில் ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கலாம். அதை எப்படி சரி செய்து கொள்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். கணவன் மனைவி பிரச்சனையை பொறுத்தவரை பிரச்சனையை ஊதி பெரிதாக்குவதால் பாதிக்கப்படப் போவது வேறுயாருமில்லை. நீங்கள் தான் என்பதை முதலில் உணர வேண்டும்.

நமக்குள் அடிக்கடி சண்டை வருகிறது? நாம் அன்னோன்யமாக இருப்பது யாருக்கோ பிடிக்கவில்லை, ஏதோ ஒரு கெட்டது நம்மை சுற்றி நடக்கிறது. அதை சரி செய்துவிட்டால் இப்படியான பிரச்சனைகள் வருவது குறைந்துவிடும் என்பது போன்ற நேர்மறையான வாக்குறுதிகளை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது மிகவும் நல்ல பலன் தரும். சண்டை போடாதவர்கள் யாருமே இல்லை. எல்லாத் தம்பதியரும் நிச்சயம் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால் அதுவே காலப்போக்கில் வெறுப்பாக மாறி விடக்கூடாது. அதில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்.

marraige-couple

நம்முடைய மனைவி தானே! நம்முடைய கணவன் தானே! என்கிற அலட்சியமான நினைப்பை முதலில் தூக்கி எறியுங்கள். நீங்கள் வேறு யாரோ ஒருவருக்கு தரும் மரியாதையை உங்கள் துணைக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்கிற அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மரியாதையான தம்பதியர்களுக்குள் பிரச்சனைகளும் குறைந்துவிடும். அடிக்கடி சண்டை வரும் சமயத்தில் வீட்டில் எந்த மாதிரியான அதிர்வலைகள் இருக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்.

- Advertisement -

வீட்டின் மேல்தளத்தில் ஆங்காங்கே தூசுக்கள் படர்ந்து கொண்டு இருந்தால் வீட்டில் நிச்சயம் கெட்ட ஆற்றல்கள் ஊடுருவும். இந்த உண்மையை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே புரிந்துவிடும். சண்டை, சச்சரவுகள் அதிகமாகும் சமயத்தில் தூசுகள் இல்லாமல் வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இந்த வேலையை செய்யுங்கள்.

ottadai

பின்னர் தம்பதியராக கோவிலுக்கு செல்லுங்கள். பிரச்சனை தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு நாளாவது, ஒரு மணி நேரமாவது இருவரும் இணைந்து கோவிலுக்கு செல்லுங்கள். நீங்கள் செல்லும் அந்த கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சத்தில் வில்வமரம் அல்லது வேம்பு அதாவது வேப்பமரம் இருப்பது போல் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

vilvam tree

வில்வ மரம் அல்லது வேப்பமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோவிலுக்கு சென்று அந்த மரத்தை இருவரும் இணைந்து வலம் வாருங்கள். அடி பிரதட்சிணம் செய்யுங்கள். அடி பிரதட்சிணம் என்பது மெதுவாக ஒரு பாதத்திற்கு மேல் ஒரு பாதமாக வைத்து பிரார்த்தனை செய்து கொள்வது ஆகும். இப்படி இருவரும் சேர்ந்து அடிப்பிரதட்சணம் செய்து விருட்சத்தை வலம் வந்தால் உங்களுடைய பிரச்சனைகள் உடனடியாக தீரும் ஐதீகம்.

vepilai-tree

இவற்றை இந்த நாளில் தான் செய்ய வேண்டும் என்பது ஒன்றுமில்லை. உங்களால் எப்போது முடியுமோ அப்போது செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். உங்களுடைய கிரக தோஷங்கள் நீங்கி கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும் என்பது நம்பிக்கை. நம்பிக்கையுடன் செய்து நீங்களும் பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
கற்பூரம் எரிந்து, கரைந்து காணாமல் போவது போல, உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் காணாமல் போகும். ஒரு முறை கண்களை மூடி இப்படி செய்து பாருங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.