பூஜை அறையில் இருக்கக்கூடாத இந்த சில பொருட்கள் தவறியும் வாங்கி விடாதீர்கள்! பிறகு வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

pooja-room-vel

பூஜை அறையில் வைத்து வழிபடுவதற்கு என்றே சில குறிப்பிட்ட பொருட்கள் உண்டு. சாலகிராம கல், கோமதி சக்கரம், ருத்ராட்சம், தாமரை மணிமாலை போன்ற சில விசேஷமான பொருட்கள் பூஜையில் வைத்து வணங்கப்படுவது வழக்கம் ஆகும். இந்த தெய்வீக பொருட்களை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக அவற்றைக் கையாள வேண்டும். இது போன்ற பொருட்களுக்கு நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணக்கூடிய தெய்வீக ஆற்றல் உண்டு. இவ்வகையான சில பூஜை அறை சாஸ்திர குறிப்புகள் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rudratcham-thiyanam

ருத்ராட்சம் அணியும் பொழுது நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. அது போல ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விதமான பூஜை முறைகளும் அவற்றை பராமரிக்கும் முறைகளும் உண்டு. பூஜையறையில் இருக்கக் கூடாத சில பொருட்கள் ஆயுதங்கள் என்று கூறலாம். கூர்மையான ஆயுதங்களை ஒருபொழுதும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளக் கூடாது. உக்ர தெய்வங்களை வணங்கும் பொழுது அரிவாள், கத்தி போன்ற ஆயுத பொருட்களைக் கொண்டு வணங்குவது உண்டு. இதனால் எதிரி பயம் நீங்கும் என்பது ஐதீகமாக இருந்து வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் வீட்டின் பூஜை அறையில் சாத்வீகமாக இருக்கக்கூடிய இடத்தில் வைப்பது அவ்வளவு நல்லதல்ல.

இந்த வகையில் வேல், சூலாயுதம் போன்ற தெய்வீக பொருட்களை நாம் வாங்கும் பொழுது நம் கை கட்டை விரல் அளவை விட சிறியதாக வாங்க வேண்டும். கட்டை விரலை விட உயர்ந்த அளவில் இருக்கும் இந்த பொருட்களுக்கு அதீத சக்திகள் உண்டு. இதன் விவரம் அறியாமல் நாம் வாங்கி வைத்தால் நமக்கு தேவையில்லாத பிரச்சினைகளும், சண்டை, சச்சரவுகளும் வீட்டில் அதிகரிக்கத் துவங்கி விடும். வேல், சங்கு, சூலாயுதம் போன்ற பொருட்களை பயன்படுத்துபவர்கள் அதற்கு தினமும் முறையாக பூஜை செய்ய வேண்டும்.

Lord Murugan Vel

கட்டை விரல் உயரத்தை விட சிறிய அளவில் இருக்கும் வேல் வைத்து பரிகாரம் செய்யும் பொழுது எண்ணற்ற பலன்களை நாம் பெறலாம். கடையில் நாமாக வாங்கினாலும் அல்லது மற்றவர்கள் நமக்கு கொடுத்தாலும் வேல் மட்டும் பெரிய அளவில் பூஜை அறையில் வைத்து இருக்கக் கூடாது. அவ்வகையான வேலுக்கு பலி கொடுப்பது என்பது விதியாகும். ஆயுதங்களுக்கு பலி கொடுப்பது என்கிற சாஸ்திர விதியை கடைபிடிக்கும் போது தான் அந்த வேல் நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.

இது போன்ற வேல் வைத்து பரிகாரம் செய்பவர்கள் அதற்கு தினமும் எலுமிச்சையை பலியாகக் கொடுக்க வேண்டும் என்பது நியதி. இதனை சரியாக செய்ய முடியாதவர்கள், அப்படியான வேலை வைத்திருக்கக் கூடாது. வேல் வைத்து பரிகாரம் செய்பவர்கள், விக்ரகங்கள் வைத்து பரிகாரம் செய்பவர்கள் அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். விக்ரஹங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கு தினமும் ஒரு வேளையாவது அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும். இவற்றை கடைபிடிக்க முடியாத பொழுது அவற்றைத் தவிர்ப்பதே அதைவிட உத்தமமாகும்.

crystal-lingam1

வீட்டில் சிவலிங்கம், முருகன் சிலை போன்றவற்றை வைத்திருப்பவர்கள் சிறிய அளவில் வைத்திருப்பது உத்தமம். பெரிதாக வாங்கி வைக்கும் பொழுது அதற்குரிய பூஜைகளை செய்ய வேண்டும். சாதாரண தண்ணீர் ஊற்றி அபிஷேகம் ஆவது செய்ய வேண்டும். எனவே இது போன்ற தெய்வீக பொருட்களை பயன்படுத்தும் போது நம்மால் அதற்கு முறையாக பூஜை செய்ய முடியுமா? என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.