தூங்கி எழுந்தவுடன் தவறியும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள் என்னென்ன? என்பது உங்களுக்கு தெரியுமா?

sleep-lakshmi

எப்பொழுதுமே தூங்கி விழித்த உடன் புதிய தினமாக தான் மனதில் நினைக்க வேண்டும். சில நேரத்தில் தூக்கத்திலேயே உயிர் பிரியும் அபாயங்களும் உண்டு. எனவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு மரணத்தை போன்றது தான். ஒவ்வொரு நாளைய பொழுதும் நீங்கள் புதிதாக பிறந்ததாக நினைப்பதால் அன்றைய நாளே சிறப்பானதாக மாற்றிக் கொள்ள முடியும். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்று வந்து விட்டாலே அவ்வளவு உற்சாகமான மனநிலை இருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அது ஒரு சாதாரண நாள் போல் கடமைக்கு என்று கொண்டாடி வருகிறோம். நம்மை சுற்றி என்ன நடந்தாலும், நம்முடைய உற்சாகத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது.

wakepu

தூங்கி எழுந்ததும் நாம் பார்க்கும் முதல் விஷயத்தை ஆழமாக மனம் பதித்துக் கொள்ளும். இப்பொழுது கேட்டால் கூட காலையில் நீங்கள் முதலில் எதை பார்த்தீர்கள்? என்று உங்களுக்கு ஞாபகம் இருக்காது. மறந்தே போயிருக்கும். ஆனால் உங்களுடைய ஆழ்மனம் அதை கிரகித்துக் கொண்டிருக்கும் என்பது தான் உண்மை. அதனால் தான் காலையில் எழுந்தவுடன் சில பொருட்களை பார்ப்பதால் அன்றைய நாள் புத்துணர்வுடன் இருக்கும் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக நம்முடைய இரு உள்ளங்கையை பார்ப்பது அன்றைய நாளை அதிர்ஷ்டமாக கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. அது போல் கண் விழித்ததும் பார்க்க கூடாத இந்த 4 பொருட்கள் பற்றிய தகவல்களை தான் இந்த பதவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதலில் நாம் தூங்கி எழுந்து, கண் விழிக்கும் பொழுது மற்றவர்களுடைய முகத்தை பார்ப்பதை விட, நம்முடைய முகத்தை கண்ணாடியிலும், உள்ளங்கையை பார்ப்பதும் அதிர்ஷ்டத்தை தரும். அது போல் தெய்வீக படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பது நல்ல நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும். பண மழை பொழிய கண்விழித்ததும் மகாலட்சுமியின் உருவத்தையும், அல்லது மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரையின் படத்தையும் பார்ப்பது மிகவும் நல்லது. எனவே தூங்கும் பொழுது உங்களுக்கு நேரெதிரே தாமரை படத்தை பெரிதாக மாட்டி வையுங்கள்.

lotus

அந்த இடத்தில் இருக்கக் கூடாத விஷயங்களும் உண்டு. மிருகங்கள் வேட்டை ஆடுவது போன்ற படத்தை சிலர் சுவற்றில் மாட்டி வைத்திருப்பார்கள். இந்த படத்தை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை சிந்தனைகளை தூண்டும். அதிலும் கண் விழிக்கும் பொழுது இந்த படத்தை பார்ப்பது அன்றைய நாளை உற்சாகம் இழக்க வைத்துவிடும்.

- Advertisement -

அது போல் கண் விழிக்கும் பொழுதே அபசகுண வார்த்தைகளைப் பேசுவதும், சண்டையோடு ஆரம்பிப்பதும் அன்றைய நாளை வீணாக்கிவிடும் என்பதால் முடிந்தவரை மனதை சாந்தப்படுத்தி அமைதியான தியான நிலைக்கு 5 நிமிடம் அமர்ந்து கோபத்தை குறைத்துக் கொண்டு, தெரிந்த மந்திரத்தை உச்சரித்து பின்னர் எழுந்திருப்பது மிகவும் நல்லது.

neruppu

ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுவாலைகள் இவைகளை கட்டாயம் விழித்தவுடன் பார்க்கவே கூடாது. இவைகள் மனதில் ஒருவிதமான சங்கடத்தை ஏற்படுத்தி எதிர்மறை ஆற்றல்களை பெறுக செய்துவிடும். ஆனால் வீட்டில் காலையிலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தால், சுடர் விட்டு எரியும் தீப விளக்கை தாராளமாக நாம் பார்க்கலாம். இதனால் அதிர்ஷ்டங்கள் பெருகி வரும். நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெறும். அன்றைய நாளில் புதிய செய்திகளும், வாய்ப்புகளும் கிடைக்கும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். எழுந்ததும் கோவில் கோபுரத்தை நேரடியாகவோ அல்லது படமாகவோ பார்ப்பது கோடி புண்ணியத்தை கொண்டு சேர்க்கும். இந்த பொருட்களுக்கு தகுந்தவாறு உங்களுடைய அமைப்பை மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே
எதிர்காலத்தில் வரப்போகும், எதிர்பாராத கஷ்டங்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி இந்த இறைவனுக்கும், இந்த 1 பொருளுக்கும் உண்டு. அது என்ன பொருள்? அதை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.