எதிர்காலத்தில் வரப்போகும், எதிர்பாராத கஷ்டங்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி இந்த இறைவனுக்கும், இந்த 1 பொருளுக்கும் உண்டு. அது என்ன பொருள்? அதை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?

murugan

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எதிர்ப்புகள் இல்லாமல், கஷ்டங்கள் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்து முடித்து விட்டார்கள். எதிர்ப்புகளும் கஷ்டங்களும் சுத்தமாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த கால சூழ்நிலையை இந்த காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நிச்சயம் அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று கூட சொல்லலாம். என்ன செய்வது? நம்முடைய இந்தப் பிறவி கலிகாலத்தில் என்று தான் எழுதி வைத்துள்ளது.

அந்தக் காலத்தில் போட்டிகளும், பொறாமைகளும் குறைவாகத்தான் இருந்து வந்தது. இந்த கால கட்டத்தில் போட்டிகளும் பொறாமைகளும் எதிர்ப்புளுடனே வாழும் சூழ்நிலை தான் நமக்கு உள்ளது அல்லவா? சரி, இந்த எதிர்ப்புகளிலிருந்து நம்மை நாமே எப்படி காத்துக் கொள்வது? கலியுகத்திலும் கலங்காத வாழ்க்கையைப் பெற வேண்டும். எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? இதற்கான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய தொழிலில் உங்களால் முன்னேற முடியவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் உங்களால் முன்னேற்றம் அடைய முடியவில்லை எனும் பட்சத்தில், ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது இது ஒன்று மட்டும் தான். உங்களுடைய வீட்டிலும், நீங்கள் தொழில் செய்யும் இடத்திலும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான முருகர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அரச கோலத்தில் இருக்கும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகனை வழிபடுவது நம்முடைய வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை தேடித்தரும்.

Lord-Murugan-1-1

முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த ராஜா கோலத்தில் இருக்கும் முருகப் பெருமானின் திரு உருவ படத்தை வாங்கி வையுங்கள். தினம்தோறும் அந்த முருகருக்கு தீபமொன்று ஏற்றி வைத்துவிட்டு, கண்களைத்திறந்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகரை தலை முதல் பாதம் வரை உற்று நோக்கி, உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். நீங்கள் முருகப்பெருமானை பார்க்கும்போது, உங்களது மனதை ஒரு நிலைப்படுத்தி, அந்த உருவம் உங்களுடைய மனதில் ஆழமாகப் பதிய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் தொழில் செய்யும் இடத்தில், உங்கள் பார்வைக்கு எதிரே பெரிய அளவில் அரச கோலத்தில் இருக்கும் முருகர் படத்தை மாட்டி வையுங்கள். உங்களது கண்பார்வை முருகனை காண வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் எதிர்பாராத இழப்புகள் எதிர்பாராத பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும் சக்தி முருகர் கையில் இருக்கும் வேல் ஆயுதத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

thiruchedur

வாழ்க்கையில் ஒருவருக்கு எதிர்பாராத விபத்தின் மூலமாக எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. இதனை சமாளிக்க வேண்டுமென்றால், உங்களுடைய வீட்டில் சிறிய அளவிலான வேல் ஒன்றை வாங்கி வைத்து வழிபாடு செய்து வர வேண்டும். சிறிய அளவிலான வேலை பித்தலையில் கூட வாங்கி வைக்கலாம் தவறொன்றும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப வேலை தங்கத்தில் வைத்தால் கூட வழிபடுவார்கள்.

Lord Murugan Vel

அந்த வேலின் முனைப் பகுதியில், மேல் பக்கத்தில் செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமையும் எலுமிச்சை பழத்தை சொருகி உங்களுக்கு வரக்கூடிய எதிர்பாராத கஷ்டங்கள் வராமல் இருக்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டிக் கொண்டால், எதிர்பாராத இழப்புகள் உங்களை நிச்சயம் நெருங்கவே நெருங்காது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Lord Murugan

எதிர்பாராத எதிர்ப்புகள் என்றால், எதிர்பாராமல் ஏற்படும் விபத்து, எதிர்பாராமல் ஏற்படும் நஷ்டம், எதிர்பாராமல் ஏற்படும் உயிரிழப்பு இப்படி உங்களுடைய வாழ்க்கையிலும் சரி, உங்களுடைய தொழிலிலும் சரி, எதிர்பாராமல் எந்த நஷ்டமும் ஏற்படாமலிருக்க முருகப்பெருமானை இந்த முறையில் தொடர்ந்து வழிபாடு செய்து வாருங்கள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயம் அந்த முருகப் பெருமான் கை கொடுப்பான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.