உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பொழுது இந்த ஒரு பொருளை மட்டும் தவறியும் வாங்கி கொடுத்து விடாதீர்கள்! பகை வந்து விடுமாம்.

fruits-relatives
- Advertisement -

முந்தைய காலங்களில் எல்லாம் உறவினர்கள் வீட்டிற்கு வெறும் கையோடு யாரும் செல்ல மாட்டார்கள். அடிக்கடி உறவினர் வீட்டிற்கு செல்லும் வழக்கமும் அப்போது உண்டு என்றாலும், வெறும் கையை வீசிக் கொண்டு சென்றால் அவமானமாக கருதுவார்கள். பழங்கள், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சென்று அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவார்கள். அப்போது அந்த உறவானது நீடித்து நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம்.

happy-family

இப்போது அருகருகே இருந்தாலும் முகம் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. இதில் எங்கு உறவினர்கள் வீட்டிற்கு செல்வது? ஏதாவது விசேஷம், திருமணம், காது குத்து என்று வைத்தால் தான் பத்திரிக்கை வைக்க உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறோம். மற்றபடி அவர்களுக்கு நலம் விசாரிக்கக் கூட நம்மிடம் நேரமில்லாமல் போய்விட்டது வருத்தத்திற்கு உரியது ஆகும். இப்படியான சூழ்நிலையில் உறவினர் வீட்டிற்கு செல்லும் பொழுது எந்த ஒரு பொருளை வாங்கிக் கொண்டு சென்றால் நமக்கு பகையை உண்டாக்கும்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்!

- Advertisement -

விருந்தும், மருந்தும் மூன்று நாட்கள் என்பது விருந்தினரின் பழமொழியாகும். எந்த ஒரு நோய்க்கும் மருந்து எடுத்துக் கொள்ள மூன்று நாட்கள் மட்டுமே முதலில் முயற்சிக்க வேண்டும். அதே போல எந்த ஒரு விருந்தினர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுதும் மூன்று நாட்களுக்கு மேல் அங்கே தங்க கூடாது என்பது சாஸ்திரம். அதற்கு மேல் அங்கு தங்கினால் அவமானமும், பகையும் உண்டாகும்.

family2

ஒரு உறவு நீடித்து நிலைத்து நிற்க அதற்கு இனிப்பான ஒரு பாலம் இருக்க வேண்டும். இன்முகத்துடன் பழகும் பொழுது தான் எந்த ஒரு உறவும் நிலைத்து நிற்கிறது. ரத்த உறவுகளாக இருந்தாலும் சரி நம் கோபத்தை கொஞ்சம் காண்பித்தால் கூட அந்த உறவு முறிந்து விடும். எனவே உறவுப்பாலம் நிலைத்து நிற்க நாம் அவர்களை சந்திக்கும் பொழுது கண்டிப்பாக ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அது இனிப்பு பொருளாக முதலில் இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

கசப்பான மற்றும் புளிப்பான எந்த ஒரு பொருட்களையும் நாம் வாங்கிக் கொண்டு போய் முதலில் கொடுத்தால் அந்த உறவானது பகைக்கு உள்ளாக நேரிடும் என்கிறது சாஸ்திரம். உதாரணத்திற்கு நீங்கள் பழம் வாங்கி செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது திராட்சை பழம் போன்ற புளிப்பான பழங்களாக இருந்தால் சற்று யோசித்து வாங்க வேண்டும். புளிப்பான எந்த ஒரு பொருளையும் உறவினர்கள் வீட்டிற்கு சென்றதும் முதலில் கொடுத்தால் அந்த உறவு பகைக்கு உண்டாக நேரிடும்.

grapes

இப்படியான பொருட்களை கொடுக்கும் பொழுது முதலில் இனிப்பு வகை ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டு அதன் பிறகு நீங்கள் அவர்களுக்கு பிடிக்குமே என்று இந்த பொருளை சேர்த்து கொடுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் முதன் முதலில் நீங்கள் சந்திக்கும் பொழுது கொடுக்கப்படும் பொருளானது இனிப்பு தவிர புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு, உப்பு போன்ற சுவைகளை கொண்டதாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பதில் மட்டும் சற்று கவனம் கொண்டால் எந்த உறவும் நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

- Advertisement -