பழைய தலைவாசல், கதவு, ஜன்னல் பற்றிய வாஸ்து குறிப்பு

old-door window-vastu

கற்களை கொண்டு கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் மரத்தால் செய்யப்பட்ட தலைவாசல்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை அமைப்பது வழக்கமான நடைமுறையாகும். தற்காலங்களில் சிலர் தங்களின் புது வீடுகளை கட்டும் போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய நிலைவாசல்கள், கதவு, ஜன்னல் போன்றவற்றை புது வீடு கட்டுமானதில் உபயோகப்படுத்துகின்றனர். இப்படி செய்வது சரிதானா என்பதை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

vastu

இன்றைய காலத்தில் சொந்த வீடு கட்டுபவர்கள் பெரும்பாலானோர் வீட்டு கடன் போன்றவற்றை வாங்கியே கட்டுகின்றனர். வீட்டை கட்டும் போது சில சமயங்களில் செலவீனங்கள் அதிகமாவதால், சிலர் சிக்கன நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்ட நிலை வாசக்கால்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை புது வீட்டின் கட்டுமானத்தில் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இந்த செயலை ஆதரிப்பதில்லை.

பெரும்பாலான பழைய நிலைவாசல்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவை கடன் அதிகமாகி விற்கப்பட்ட வீடுகள், பாழடைந்த வீடுகள், நீதிமன்றத்தால் கையகப்படுத்தப்பட்ட கட்டடங்கள், வீட்டின் உரிமையாளர்கள் அனைவரும் இறந்து போன வீடுகள், வாஸ்து தோஷம் நிறைந்திருக்கும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் போன்ற கட்டிடங்களை இடிக்கும் போது குறைந்த விலையில் வாங்கி மக்களின் பயன்பாட்டிற்கு விற்கப்படுகின்றன. இத்தகைய கட்டிடங்கள் அனைத்திலும் தோஷம் இருப்பதால் இக்கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட நிலைவாயில், கதவுகள், ஜன்னல்கள் போன்றவையும் தோஷம் நிறைந்திருப்பதால் இவற்றை புது வீடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

used doors

புது வீடு கட்டுபவர்கள் அவர்களும், அவர்களின் சந்ததிகளும் தலைமுறைகளை கடந்து வாழ்வதற்கான தங்களின் வீட்டை கட்டுவதால் சற்று கூடுதல் செலவு பிடித்தாலும், தரமமான மரங்களை கொண்டு புதிதாக வீட்டு நிலைவாசல்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை செய்து அவற்றை பயன்படுத்தி வீட்டை கட்டுவதே சிறந்தது. இதனால் துஷ்ட சக்திகள் , எதிர்மறை அதிர்வுகள் உங்களின் வீடுகளுக்குள் நுழையாமல் தடுக்கப்படுகிறது. அவ்வீட்டில் வாழ்பவர்களுக்கு நன்மைகளையும், வளங்களையும் உண்டாக்குகிறது.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க வாஸ்து பரிகாரம்

இது போன்று வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vastu for old doors and windows in Tamil. Pazhaiya kathavu jannal vasthu tips in Tamil. Doors and windows vastu tips in Tamil.