- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி அமாவாசை செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை

ஆடி அமாவாசை செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை

- Advertisement -

மாதம் முழுவதும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடக் கூடியவர்கள் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபாடு செய்வார்கள். முன்னோர்களின் ஆசி இருந்தால்தான் அவர்களால் அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்குச் செல்ல முடியும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட முன்னோர்களுக்கு உகந்த திதியாக திகழக்கூடிய அமாவாசை திதி ஒவ்வொரு மாதமும் வந்தாலும் ஆடி அமாவாசை என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் இருக்கக்கூடியவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் செய்யக்கூடாத செயல்கள் என்று சில இருக்கின்றன. அதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவுகளை நாம் பார்க்க போகிறோம்.

ஆடி அமாவாசை செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை

ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு நன்மைகள் தரக்கூடிய செயல்களும் இருக்கும், தீமைகள் தரக்கூடிய செயல்களும் இருக்கும். அவற்றை அலசி ஆராய்ந்து நன்மைகள் செய்யக்கூடிய செயல்களை மட்டுமே நாம் பின்பற்றினோம் என்றால் நமக்கு நன்மைகள் ஏற்படும். ஆனால் பலரும் தங்களுக்கு தெரியாமலேயே தீமைகள் வரக்கூடிய செயல்களை செய்து மாட்டிக்கொள்வார்கள். அப்படி ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று செய்யக்கூடாத செயல்களைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஆடி அமாவாசை என்பது ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி மாலை 5 மணிக்கு ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி மாலை 5:40க்கு முடிவடைகிறது. அதனால் சனிக்கிழமை அன்று மாலையிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மற்றும் மாலை இந்த மூன்று வேளைகளிலும் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் சாப்பிடக்கூடாது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தம்பதிகள் உடலுறவு செய்யக்கூடாது. இந்த இரண்டு நாட்களிலும் தீட்டு வீட்டிற்கு சென்று துக்கம் விசாரிக்க கூடாது.

அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் நகைகளை அடமானம் வைக்க கூடாது. யாரிடமும் கடன், இரவல் போன்றவற்றை வாங்கக்கூடாது. நகம் வெட்டக்கூடாது. பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது. முடி வெட்டக்கூடாது. வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது. பெண்கள் யாரிடமும் கோபப்பட்டு அவர்களுக்கு சாபத்தை தரக்கூடாது. செய்யக்கூடாத செயல்களைப் பற்றி பார்த்து விட்டோம். இப்பொழுது செய்ய வேண்டியதை பார்ப்போமா?

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் என்ன சமைக்கிறோமோ அதை காகத்திற்கு சிறிதளவு வைத்து விட்டு உண்பது என்பது சிறப்பு. அதேபோல் நம் வீட்டில் இறந்த முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு வாழை இலை விரித்து படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களின் அருள் கிடைக்கும். வசதி இல்லை என்பவர்கள் கூட தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு பொருளை சமைத்து அவர்களுக்கு வைத்துவிட்டு பிறகு காகத்திற்கு வைத்து அதற்குப் பிறகு உணவு அருந்தினால் முன்னோர்களின் அருளால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே: ஆடி அமாவாசை காகத்திற்கு உணவளிக்கும் முறை

வீட்டில் இருக்கக்கூடிய பெண்களாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் மேற் சொன்ன விஷயங்களில் கவனம் செலுத்தி முறையாக பின்பற்றும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகளும் தாமதங்களும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்