- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருக்கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத செயல்கள்

திருக்கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத செயல்கள்

- Advertisement -

திருக்கார்த்திகை என்றதும் நம் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை. அங்கு தீபம் ஏற்றும் பொழுது நாமும் நம்முடைய இல்லத்தில் அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றுவோம். அவ்வாறு தீபம் ஏற்றும் பொழுதும் அல்லது அந்த தீபத்தை ஏற்றுவதற்காக தயார் செய்யும் பொழுதும் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அப்படி நாம் அந்த செயல்களை செய்தோம் என்றால் நமக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வரும் என்று கூறப்படுகிறது. அந்த செயல்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருக்கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத செயல்கள்

பொதுவாகவே நம்முடைய வீட்டில் நாம் சில செயல்களை செய்யும் பொழுது அது தரித்திரம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளை உண்டாக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பார்கள். ஏன் மகாலட்சுமி தாயார் நம்முடைய வீட்டிற்குள் வரும்பொழுது நாம் சில செயல்களை செய்திருந்தோம் என்றால் உள்ளே வராமல் சென்று விடுவார்கள் என்றும் அவருடைய சகோதரி வீட்டிற்குள் வந்துவிடுவார் என்றும் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பலரும் அந்த செயல்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று முயற்சியும் செய்வார்கள் பின்பற்றவும் செய்வார்கள். அந்த வகையில் திருக்கார்த்திகை நாளன்று செய்யக்கூடாத சில செயல்களை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

திருக்கார்த்திகை என்றதும் நம் நினைவிற்கு வருவது தீபம் ஏற்றுவது தான். இந்த தீபத்தை ஏற்றுவதற்காக அகல்விளக்குகளை தயார் செய்வோம். அதிலும் ஒவ்வொரு வருடமும் நாம் புதிதாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் அகல் விளக்குகளை வாங்கி வந்து அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பார்கள். அப்படி நாம் வாங்கக்கூடிய அந்த அகல் விளக்கை எந்தவித பேரமும் பேசாமல் வாங்க வேண்டும். அவர்கள் என்ன விலை சொல்கிறார்களோ அந்த விலையை கொடுத்து வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அன்றைய தினத்தில் பெண்கள் நைட்டி, கிழிந்த உடைகள், அழுக்கான உடைகள் போன்றவற்றை அணியாமல் பட்டுப் புடவை அல்லது பருத்திப் புடவையை அணிந்து மஞ்சள் பூசி நெற்றியில் குங்குமம் வைத்து தலையில் பூக்களை வைத்து கைகளில் வளையல் அணிந்து கொண்டும் மருதாணி வைத்துக்கொண்டும் தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்தில் தீபலட்சுமி எழுந்தருளி நம் வீட்டில் அனைத்து விதமான செல்வங்களையும் தருவார்கள் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆண்களும் இதேபோல் சாட்ஸ், கைலி போன்றவற்றை அணியாமல் பருத்தியாலான சுத்தமான துணிகளை அணிந்து நெற்றியில் திருநீரு பூசிக்கொண்டு தான் தீபம் ஏற்ற வேண்டும் அல்லது தீபம் ஏற்றுவதற்கு தயார் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பு குழந்தைகளுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கார்த்திகை நாளன்று வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் சேர்ந்து வீடு முழுவதும் தீபம் ஏற்றினால் தான் அந்த தீபச்சுடர்ளியில் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும் யார் தீபம் ஏற்றுகிறார்களோ அவர்களிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் நீங்கும் என்பதால் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அன்றைய தினத்தில் தீபம் ஏற்ற வேண்டும் அல்லது தீபம் ஏற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்ததாக தீபம் ஏற்றும் பொழுதும், தீபம் எரிந்து கொண்டு இருக்கும் பொழுதும் எதிர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது. யாரையும் திட்டக்கூடாது. மனதாலும் சொல்லாலும் யாரையும் கஷ்டப்படுத்தாமல் தீபம் ஏற்ற வேண்டும். முடிந்த அளவிற்கு தீபம் ஏற்றும் பொழுது தீபலட்சுமியே எழுந்தருள்க என்றோ அல்லது இல்லக விளக்கது இருள்கெடுப்பது என்ற சிவபெருமானின் பதிகத்தை படித்துக் கொண்டோ தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு

மேல் சொன்ன இந்த செயல்களில் கவனம் செலுத்தி திருக்கார்த்திகை நாளன்று தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கப்பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்