மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தேவையான அளவு ஓய்வும் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கடன் சுமை குறையும். வீட்டில் இருப்பவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் பிரச்சினைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. அலுவலக வேலையில் பிரச்சனைகளை பெருசாக்க கூடாது. அனுசரித்து சென்றால், இந்த நாள் நல்லதே நடக்கும். அவசரப்பட்டால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று ஆன்மீகம் சார்ந்த வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். குடும்பத்தோடு கோவில் செல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களோடு உறவுகளோடு உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். எந்த பிரச்சனை வந்தாலும் கூடுமானவரை பொறுமையாக இருப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்ற சுகமான நாள்தான். வேலைக்கு, நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் எல்லாம் கிடைக்கும். பண்டிகை விடுமுறை நாட்கள் எல்லாம் முடிந்து உங்களுடைய வேலையை துவங்கி இருப்பீர்கள். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். பெருமாள் வழிபாடு வருமானத்தை பெருக்கிக் கொடுக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிரி தொல்லை விடுபடும். உறவுகளோடு இருந்து வந்த மனகசப்பு நீங்கும். சுப செலவுகள் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று வருமான தடை விலகும். நீண்ட நாட்களாக வராமல் தேங்கியிருந்த பணம் உங்கள் கையை வந்து சேரும். சொத்து சுகம் வாங்க வாய்ப்புகள் உள்ளது. வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இந்த நாள் அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். ப்ரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய உறவுகள் உங்களை தேடி வரும். காதல் கைகூடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். சுப செலவுகள் ஏற்படும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் போடலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யுங்கள். நல்லதே நடக்கும். வேலையில் கொஞ்சம் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது. முன்கோபம் வேண்டாம். பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். விரைய செலவுகள் உங்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை மறக்கக்கூடாது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் கைகூடி வரப்போகும் நாளாக அமையும். நீண்ட நாள் தடைப்பட்டு கொண்டிருந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் வீட்டில் மீண்டும் நடக்க துவங்கும். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு வரலாம். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.