தோசைக்கல்லின் ஓரங்களில் இருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை எளிய முறையில் நீக்கி ஒட்டாமல் பெரிய தோசை வருவதற்கு என்ன செய்யலாம்?

dosai-kallu
- Advertisement -

நாம் உபயோகிக்கும் தோசைக்கல் புதிதாக வாங்கும் பொழுது ஒரு கரண்டி மாவை ஊற்றி அந்த தோசைக்கல் இருக்கும் அளவிற்கு பெரியதாக தோசை சுட முடியும். ஆனால் நாளடைவில் அதில் எண்ணெய் பிசுக்கு சேர்ந்து போய் தோசை சிறியதாக சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். பெரிய அளவில் தோசை சுடுவதற்கு இது போல் ஓரங்களில் இருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை எளிய முறையில் நீக்கி விட வேண்டும். அதை எப்படி நீக்குவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

dosaikal

தோசைக்கல்லில் வினிகர், பேக்கிங் சோடா போன்ற எந்த விதமான பொருட்களையும் நாம் உபயோகிக்க தேவையில்லை. வெறும் ஒரு டீஸ்பூன் கல் உப்பு வைத்து தோசைக்கல்லில் இருக்கும் அதிக எண்ணெய் பிசுக்கை நீக்கி புதியதாக வாங்கிய தோசை கல் போல் மாற்றி விட முடியும்.

- Advertisement -

எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலம் எண்ணெய் பிசுக்கை எளிதாக நீக்கி விடக்கூடிய தன்மை கொண்டுள்ளது. கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழம் அரை மூடி இருந்தாலே போதும் தோசைக்கல்லை சூப்பராக புதியது போல் செய்து விடலாம். தோசைக்கல்லில் நாளடைவில் ஓரங்களில் படியும் எண்ணெய் பிசுக்கு அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கும். தோசை சுடும் பொழுது அந்த இடத்தில் இருக்கும் மாவு சரியாக வேக முடியாமல் தோசை பிய்ந்து போய் விடும்.

dosai-kal3

இதற்கு உங்களுடைய தோசைக்கல்லை அடுப்பின் மேல் வைத்து அடுப்பை லோ ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள். லேசாக சூடேறியதும் அதில் ஒரு டீஸ்பூன் அளவு கல் உப்பு எடுத்து போட்டு கொள்ளுங்கள். அரை மூடி எலுமிச்சை பழத்தை ஒரு ஸ்பூன் பயன்படுத்தி பின் பக்கமாக குத்திக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனை பிடித்து எலுமிச்சையை கல் உப்பின் மீது நன்கு தேய்க்க வேண்டும்.

- Advertisement -

இப்படி கல் லேசாக சூடாக இருக்கும் பொழுது கல் உப்பை கொண்டு தேய்க்கும் பொழுது அதில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பிசுக்கு, படர்ந்த கரி போன்றவை எளிதாக நீங்கி விடும். ஒரு பத்து நிமிடத்திற்கு இதே போல் தேய்த்துக் கொண்டே இருங்கள். பின்னர் தோசை கரண்டி பயன்படுத்தி ஓரங்களில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் சுரண்டி எடுத்து விட வேண்டும்.

dosai-kal5

அதன் பின் மீண்டும் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழிந்து இதே போல் உப்பு சேர்த்து தேய்த்து எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு தோசைக்கல்லை தண்ணீரால் சுத்தம் செய்து வைத்து எண்ணெய் ஊற்றி ஒரு சுத்தமான துணியை வைத்துத் துடைத்து எடுத்தால் போதும்! நீங்கள் புதியதாக வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ! அதே போல் உங்களுடைய தோசைக்கல் மாறிவிட்டிருக்கும்.

- Advertisement -

dosai

இப்போது இந்த தோசைக்கல்லில் ரவா தோசை, மணக்க மணக்க நெய் தோசை, மொரு மொரு தோசை என்று எதை சுட்டாலும் பெரிய அளவில் உங்கள் தோசைக்கல் எவ்வளவு அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு அழகாக சுட்டு எடுக்க முடியும். கொஞ்சம் கூட தோசைக் கல்லில் மாவு ஒட்டாமல் சீக்கிரம் வெந்து க்ரிஸ்பியான தோசை உங்களுக்கு கிடைக்கும்.

dosai-kal1

தோசைக்கல்லை அடிக்கடி பராமரிப்பது மிகவும் நல்லது, அப்படியே விட்டுவிட்டால் இது போன்ற எண்ணெய் பிசுக்கு நாளைடைவில் படிந்து விடும். நாம் அதனை எடுத்து பயன்படுத்தும் பொழுது எண்ணெய் பிசுக்கு நமக்கு அருவருப்பை உண்டாக்கும். அது போல் துணி பயன்படுத்தி எண்ணெய் வைப்பதை விட, பாதி அளவிற்கு வெட்டிய வெங்காயத்தை தோலுரித்து அதை ஒரு ஸ்பூனில் பின்புறமாக குத்திவிட்டு தோசை கல்லில் தேய்த்து வந்தால் எப்பொழுதும் தோசை ஒட்டாமல் வரும். வெங்காயத்திற்கு பதிலாக கத்திரிக்காயும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே
எந்த திசையில் எந்த செடி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று தெரிந்து கொண்டு வையுங்கள்! யோகம் தரும் செடிகளும் அவை வைக்க வேண்டிய இடங்களும்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -