எந்த திசையில் எந்த செடி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று தெரிந்து கொண்டு வையுங்கள்! யோகம் தரும் செடிகளும் அவை வைக்க வேண்டிய இடங்களும்!

plant-vasthu

எல்லா வகையான செடிகளையும் வீட்டில் வளர்க்க முடிவதில்லை. குறிப்பிட்ட சில செடி வகைகள் பூஜையின் பயன்பாட்டுக்கும், நம் சொந்த உபயோகத்திற்கும் வளர்த்து வருவது எல்லோருமே செய்யக் கூடிய ஒரு விஷயம் தான் என்றாலும் சில செடி வகைகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வகையான செடி வகைகள் நமக்கு பயனுள்ள செடிகளாகவும் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. இந்த செடி வகைகளை குறிப்பிட்டு வீட்டில் இந்த இடங்களில் வைத்து வளர்ப்பதால் யோகம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. அப்படியான செடிகள் மற்றும் அதை வைக்க வேண்டிய இடங்களைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

thulasi

முதலாவதாக நாம் பார்க்க இருப்பது தெய்வீக துளசி செடி தான். துளசி இல்லாத வீடு கோபுரம் இல்லாத கோவில் போன்றது ஆகும். துளசி இருக்கும் வீடுகளில் நிச்சயம் அதிர்ஷ்டமும், நிம்மதியும் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. துளசி செடியை வீட்டின் கிழக்கு திசையில் பின்புறம் அமைத்து வைத்து வழிபாடு செய்வது யோகத்தை உண்டாக்கும். துளசி செடியை ஒரு போதும் காடு போல் படர விட்டு விடக்கூடாது.

கற்றாழை செடியை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் வைத்து தாராளமாக வளர்க்கலாம். அதிர்ஷ்டம் தரும் கற்றாழையை வீட்டில் உள்ளே வெயில் படும் இடங்களில், வடக்கு திசையில் வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். மணி பிளான்ட் என்று கூறப்படும் அதிர்ஷ்டம் தரும் செடியை கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் ஒருபோதும் வைத்து வளர்க்கக்கூடாது. மற்ற திசைகளில் எங்கு வேண்டுமானாலும் வைத்து தாராளமாக வளர்க்கலாம்.

மணிபிளான்ட் வீட்டிற்கு வெளியில் வளர்ப்பதை விட வீட்டிற்கு உள்ளே கண்ணாடி குவளையில் வளர்ப்பது யோகத்தை தரும். அப்படி ஒரு வேளை உங்களுடைய மணி பிளான்ட் வாடிப்போய் விட்டால் தயவு செய்து அதை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுவது நல்லது. வாடிய மணி பிளான்ட் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

முட்கள் உள்ள ரோஜா போன்ற செடிகள் வீட்டின் பின்புறம் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மாதுளை, நெல்லி போன்ற மரங்களை வீட்டின் முன்புறம் கிழக்கு திசையில் வைத்து வளர்ப்பது லக்ஷ்மி தேவியை வரவேற்பதற்கு சமமாக கருதப்படுகிறது. குபேரனின் செல்வத்தை மீட்டுக் கொடுத்த நெல்லி மரம் ஒவ்வொருவரின் வீட்டில் இருப்பதும் பெரும் அதிர்ஷ்டத்தை சேர்க்கிறது.

rose-plant-watering

அரளிச்செடி, வெற்றிலை கொடி, பாகற்காய், முருங்கை மரம் போன்ற தாவர வகைகளை வீட்டின் முன்புறம் வளர்ப்பது தவறானது. இவற்றை வீட்டின் பின்புறம் வளர்ப்பது யோகத்தை தரும். இந்த செடி மற்றும் மரங்கள் வீட்டின் பின்புறம் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் அமைப்பது உத்தமம். வெற்றிலையுடன் சேர்த்து வேறு ஒரு செடியையும் வைப்பது நல்லது. அது எந்த வகையான செடியாக இருந்தாலும் பரவாயில்லை. வெற்றிலை கொடியை எப்போதும் தனியாக வளர்ப்பது நல்லதல்ல.

Murungai keerai

முருங்கை மரத்தில் கம்பளி போன்ற பூச்சிகள் வருவதால் அவர்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் வீட்டின் முன் வளர்க்க கூடாது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது போல் ஒவ்வொரு செடி வகைகளுக்கும் அந்தந்த இடங்களில் வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். மல்லிகை, மருதாணி போடுற செடிகளையும் கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் எப்போதும் நிலைத்து நிற்கும்.

sembaruthi

செம்பருத்தி, பட்ரோஸ், 5 மணி பூ, கற்றாழை, அழகுக்காக வைக்கப்படும் குரோட்டன் செடிகள் போன்றவை வீட்டின் பிரதான வாசலுக்கு இருபுறங்களிலும் முன்புறத்தில் வைத்து வளர்ப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். மெயின் கேட் உள்ளே அல்லது வெளியே எங்கே வேண்டுமானாலும் இரண்டு புறங்களிலும் இவைகள் அமைக்கப்பட்டால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே
இந்த டப்பாவை இனி தூக்கிப் போடாதீங்க! உங்க வீட்டு சமையலறை 24 மணி நேரமும் வாசமாக இருக்க, இந்த ஒரு டப்பா போதும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.